கட்டுரை
சர்வதேச செஞ்சிலுவை தினம்

சர்வதேச செஞ்சிலுவை தினம்!
********************************
மனிதநேய முத்திரையோடு உலகளாவிய ரீதியில் பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவதுதான் செஞ்சிலுவைச் சங்கம். செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்தவர் ஜீன்ஷென்றி டுனன்ட் என்பவராவார். இவரின் பிறந்த தினமான மே. 8ம் திகதியே சர்வதேச ரீதியில் செஞ்சிலுவைச் சங்க தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
1859ம் ஆண்டிலே ஆஸ்திரிய சாம்ராஜ்ய படைகளுக்கும், பிரான்ஸின் சார்டீனீயா நாட்டுப் படைகளுக்கும் இடையே வட இத்தாலியிலுள்ள சோல்பரினோ என்ற இடத்தில் வைத்து இடம்பெற்ற யுத்தத்தின் கொடூரத்தை தன் கண்களால் கண்டு வேதனையடைந்த ஜெனீவா நகர இளைஞரான ஹென்றி டுனன்ற்றுக்கு ஏற்பட்ட எண்ணக் கருவின் பிரதிபலிப்பே இந்த செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.