தமிழ் என்றும் அமிழ்தே-

குறுந்தொகை/ புலவர் ஓதலாந்தையார்.
தமிழ் என்றும் அமிழ்தே- (
குறுந்தொகையின் இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் ஓதலாந்தையார்.
” காண விருப்பை வேனல் வெண் பூ
வளிபொரு நெடுஞ்சினை யுகுத் தலி னார் கழல்பு
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்
பிறங்குமலை யருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து
பயிலிரு ணடு நாட்டு யிலரி தாகித்
தெண்ணீர் நிகர் மலர் புரையும்
நன்மலர் மழைக்கணீற் கெளிய
வாற் பனியே
(தலைவன் பிரிந்த காலத்து வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக. யான் ஆற்றுவேன் என் கண்கள் துயிலாகி உடைய கண்ணிற்கு நீர் துளிகள் எதிலே அழுதன என்று தலைவி கூறியது.
காட்டிலே வளர்ந்த இருப்பை மரத்தினது, வேனிற் காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள், காற்றால் அலைக்கப்பட்ட நெடிய கொம்புகள் உதிர்ப்பதனால் காம்பினிறும் கழன்று களிறுகள் செல்லும் சிறிய வழி மறையும் படி பரக்கின்ற விளங்கிய மலைகளையுடைய கடத்தற்கு அரிய பாலை நிலத்தை, கடந்து சென்ற தலைவரை நினைந்து பயிலுகின்ற இருளை யுடைய அரை இரவில், துயிலல் அரியதாகி தெள்ளிய நீரிடத்துள்ள ஒளியை யுடைய மலரை ஒக்கும்,நல்ல மலர்ந்த குளிர்ச்சியையுடைய கண்ணிற்கு, நீர்த்துளிகள் எளிதிலே உண்டாவன.
