தமிழ் என்றும் அமிழ்தே –

குறுந்தொகை பாடல் எண் 235,
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகை பாடல் எண் 235, இந்தப் பாடலை இயற்றியவர் புலவர் மாயெண்டன்
ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்கும் தூவெள் அருவிக்
கல் உயிர் நண்ணி அதுவே நெல்லி
மரை இனம்ஆரும் முன்றில்
புல்வேய் குரம்பை நல்லோள் ஊர ”.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன், தான் தேடிச் சென்ற பொருளைப் பெற்றுத் திரும்பிவருகிறான். வரும் வழியில் தலைவியின் ஊர் அவன் கண்களில் படுகிறது. அவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், இப்பொழுது கார்காலம் முடிந்து குளிர்காலம் வந்தது. குளிர்காலம் வந்ததால் வாடைக்கற்று வீசுகிறது. தன்னைப் பிரிந்திருக்கும் தலைவி, வாடைக் காற்றினால் வருந்துவாள் என்பது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. ஆகவே, ”என் தலைவியை வருத்தாமல் பாதுகாப்பாயாக” என்று வாடைக் காற்றை வேண்டுகிறான். இப்பாடலைத் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்ததாகக் கருதாமல், வாடைக் காற்றை நோக்கிக் கூறியதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
( தலைவியால் ஈர்க்கப்பட்ட தலைவன் பிரிய முற்படும் போது, தலைவியை நினைக்கும் அந்நேரத்தில், வாடைக்காற்றே அதோ தெரிகின்றதே அது தலைவியின் ஊர்: நீ அவளை பாதுகாப்பாயாக என்று பாகனுக்கு உணர்த்திய தலைவன் கூற்று)
வாடைக்காற்றே, நெல்லிக்காயை மரையின் திரள் உண்ணுகின்ற முன்னிடத்தையுடைய புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய நல்ல தலைவியினது ஊரானது பாம்பின் நாலுகின்ற உரையை ஒக்கும், தூய வெள்ளிய அருவியை உடைய மலையின் உயரத்திலே பொருந்தியது:அங்கேயுள்ள தலைவியை நீ பாதுகாப்பாயாக: நீயும் வாழ்வாயாக!.
