இசை வித்தகர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு நினைவு நாளின்று


!
மெல்லிசை மன்னர்களின் குருநாதர்; இசை வித்தகர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு நினைவு நாளின்று
அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’, கலைஞர் கருணாநிதியின் ‘மலைக்கள்ளன்’ , எம்ஜிஆரின்’ ராஜகுமாரி’, ‘மர்மயோகி’, நம்பியார் ஏராளமான வேடங்களில் நடித்து அசத்திய ‘திகம்பர சாமியார்’ சிவாஜியின் ‘அன்னையின் ஆணை’ என தமிழ் திரை உலகில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வெற்றிப்பாடல்களை அளித்தவர் சுப்பையா நாயுடு.
‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாடலையும் ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று எம்ஜிஆருக்கு, அவரின் திரை வாழ்வுக்கும் அரசியலுக்குமாக அன்றைக்கும் கட்டியம் கூறும் வகையில் இசைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
62ம் ஆண்டில், எஸ்.ஜானகியின் குரலில், ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பாடலாகும். சந்திரபாபுவை குங்குமப்பூவே பாடலின் மூலம் ஒரு சிறந்த பாடகராக உருவாக்கினார். டி.எம்.எஸ் பாடிய முதல் திரைப்பாடலுக்கு இசையமைத்தவர், கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர். எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த முதல் பாடலை திரையில் ஒலிக்க செய்தவர்.
1950 களின் இறுதியிலும் 1960 களின் தொடக்கத்திலும் புகழில் உச்சியில் இருந்த எஸ்.எம் சுப்பையா நாயுடு 1976 ஆம் ஆண்டில் “கவிராஜ காளமேகம்’ என்ற படத்திற்கு கடைசியாக இசையமைத்தார். எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன், ஆர். சுதர்சனம் போன்றவர்களும் எஸ்.எம். சுப்பையா இசையமைத்த காலத்தில் தமிழ்த் திரையுலகில் இசையமைத்து வந்தனர்.
தென்னிந்திய திரை இசை உலகில் “சங்கீதையா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.எம்.சுப்பையா நாயுடு இறுதியில் 1976ம் ஆண்டு இதே மே மாதம் 26ம் தேதி மறைந்தார்.
From The Desk கட்டிங் கண்ணையா