இன்று உலக கவிதை தினம்”

“இன்று உலக கவிதை தினம்”
தெய்வப் புலவர் எழுதிய திருக்குறளில் காலம் அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள ஒரு திருக்குறளை படித்து, அக்கருத்துக்கு ஒப்ப காளமேகப்புலவர் தனக்கே உரிய பாணியில் ஒரு செய்யுளை இயற்றியுள்ளார்.
முதலில் திருக்குறள்:
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது
இதன் பொருள்:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானை பகலில் வென்றுவிடும் காக்கை தன்னைவிட வலிய கோட்டானை பகலில் வென்றுவிடும்
அது போல் பகையை வெல்லக் கருதும் அரசருக்கு அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
இந்தத் திருக்குறளை, முடித்தபின்னர் இதேபோல பொருளுள்ள செய்யுளை காளமேகப்புலவர் அவரது பாணியிலேயே தமிழுக்கு தந்தருளி உள்ளார்
இந்தச் செய்யுளில் க், க,கா, கு, கூ, கை , கொ , ஆகிய 7 எழுத்துக்கள் மட்டுமே இந்த கவிதை அடங்கியிருக்கும்.
இந்த உலகத்தில் நான்கு வரி கவிதையில் ஏழே எழுத்துக்களில் எந்தவொரு புலவரும் பாடல் எழுதி இருப்பது மிக மிகக் கடினமே.
செய்யுள்:
காக்கைக்கா காகூகை கூகைக்கா
காகாக்கை கொக்குக்கூ காக்கைகுக் கொக்கொக்க கைகூகைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா
பாருங்க, படிப்பதற்கு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், சிரமப்பட்டு படித்தால் மட்டும் சுகம்.
இதன் பொருள்
கூகை – ஆந்தை.
காக்கை யானது பகலில் கூகையை வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும்.
கோ என்பது அரசன்.
பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை, இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும்.
எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலமெனில் தகுதியான அரசனுக்கு கூட கையாளகிவிடக் கூடும்.
காளமேகப்புலவர் கருத்துக்கள் அடங்கிய, பல்வேறு செய்யுள்கள் நமக்கு தந்திருப்பதை இன்னும் பாராட்டத்தான் வேண்டும்.
என்ன ஒரு தமிழ் ஞானம்.
அதனை நாம் உணர்ந்து கொள்வத
அவ்வளவு எளிதல்ல.
அம்பிகையின் அருள் காளமேகப் புலவருக்குக் கிடைத்ததால், அவர் தந்த தமிழை மெச்சுகிறோம்.
தமிழ் மொழியின் சொற்களை செய்யுள் களில் எந்த அளவுக்கு பயன்படுத்தியுள்ளார். இவர் எழுதிய செய்யுள்களின் பொருளை உணர்த்திய நம் தமிழறிஞர்களின் பெருமையே பெருமை.
“தமிழ் மொழி” வாழ்க என்று சொல்லி, காளமேக புலவரால் உருவான செய்யுள்களை நாம் என்றென்றும் படித்து அறிவை வளர்த்துக் கொள்வோம். உலக கவிதை தினமான இன்று காளமேகப் புலவரை பாராட்டுவோம்

முருக. சண்முகம்
சென்னை 56