தமிழோடு கலந்திட்டவரே!

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் சுஜாதா என்பவரும் ஒருவர். இவர் கற்ற கல்வி, கற்றதை எடுத்துரைக்கும் ஆற்றலுக்கு அளவில்லை. இவரது நினைவு நாள் இன்று(27.02.2008)
இயற்பெயரான ரங்கராஜன், என்றாலும் தனது மனைவியின் புனைப்பெயரில் கட்டுரை எழுதுவார். இவரின் சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள், கட்டுரைகள், அறிவியல் நூல்கள், திரைப் படத்திற்கான கதைகள் எல்லாம் தனி முத்திரை பதித்து தமிழக மக்களின் மனதில் நிலையான இடத்தினை பிடித்தது.
சுஜாதா அவர்கள் திருச்சி ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் படிக்கும் பொழுது, அவருடன் படித்தவர் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அ. பெ. ஜெ.அப்துல் கலாம் அவர்கள்.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்கிய முக்கிய காரணமாய் இருந்தவர். குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ படித்த இவர் எல்லாத் துறையிலும் வல்லவராய் இருந்தவர்.
இவரது கல்லூரி கால நண்பர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள், எங்கள் ஊரான ஏகனாம்பட்டை சேர்ந்தவர். இது ராதாகிருஷ்ணன் அவர்கள் கனடாவில் உள்ள கன்கார்டியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர்.
ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்துள்ளார்.
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் பல திரைப்படத்திற்கு கதைவிவாதத்தில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு.
விக்ரம் படத்தின் கதை இவருடையது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படத்திற்கான கதை விவாதத்திலும் பங்கு பெறுவார்
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாய் சில வரிகள்.
சிந்தனையாளர் சுஜாதா அவர்களே
உமது படைப்புகள் யாவையும்
எளிமையானதா!
எவரையும் ஈர்ப்பதா!
கருத்துமிக்கதா!
கவலை மறைப்பதா!
அறிவை வளர்ப்பதா!
அதிசயம் மிக்கதா!
ஆனந்தமிக்கதா!
அழுத்தம் கொண்டதா!
ஞானம் உள்ளதா! விஞ்ஞானம் கலந்ததா!
சுகம் தருவதா!
சுவை சேர்ப்பதா!
சக்தி கொடுப்பதா!
சரித்திரம் படைப்பதா!
வினோதம் அளிப்பதா!
விளக்கம் தருவதா!
சிரிக்க வைப்பதா! சிந்தனை தூண்டுவதா!
உயர்வை சொல்வதா!
உள்ளம் தொடுவதா!
விழிப்பைத் தருவதா!
வியப்பை அளிப்பதா!
புவியில் வலம் வந்ததா
புவிக்கு வளம் சேர்த்ததா
நேற்று வரை தமிழை (27.02.2008) சுவாசித்தாய்!
இந்த தமிழோடு கலந்திட்டாய்!

முருக.சண்முகம்
சென்னை. 56