ரகுவரன் மரணத்தின் போது, நான் சந்தித்த துன்பங்கள்விவாகரத்துக்குப் பிறகும் ரகுவரன் செய்த உதவிகள்

ரகுவரன் மரணத்தின் போது, நான் சந்தித்த துன்பங்கள்: நடிகை ரோகிணி!
மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகினி, ரகுவரனின் மரணத்தின் போது, தான் சந்தித்த துயரங்களை விவரித்துள்ளார்.
90 மற்றும் 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ரகுவரன். குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ரகுவரன், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். கமர்ஷியல், டிராமா என இரண்டு வகையான படங்களிலும் நடித்த ரகுவரனின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளாமே உண்டு.
கடந்த 1996 ஆம் ஆண்டு, நடிகை ரோகினியைத் திருமணம் செய்து கொண்ட ரகுவரன், 2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்து, விவாகரத்தும் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் உள்ளார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான நடிகர் ரகுவரன், 2008 ஆம் ஆண்டு உடலுறுப்பு செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், நடிகை ரோகினி ரகுவரனின் மரணத்தின் அவர் அனுபவித்த துன்பங்களை பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ரகுவரன் இறந்தபோது, ரிஷியை நான் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். அன்று, எங்களுக்கு ஊடகங்களில் இருந்து சிறிது தனிமை தேவைப்பட்டது. அதனால், ஊடகங்கள் யாரும் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்தேன்.
ஆனால், நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர்.ரிஷிக்கு அது கடினமாக இருந்தது. அன்றிலிருந்து, அவன் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் என்னுடன் பங்கேற்பதில்லை. என்னுடன் வெளியே வரும்போது, என்னுடன் சேர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதால், அவன் என்னுடன் வெளியே வருவதே இல்லை.
ரகுவின் இறப்பிற்கு பின், அவரது நினைவாக இசை ஆல்பம் ஒன்றை ரஜினிகாந்த் வெளியிட்டார். ரிஷி, அதற்கு கூட வர விரும்பவில்லை. பின், எனது வற்புறுத்தலுக்கு இணங்கி அதில் பங்கேற்றான்” என்று கூறியுள்ளார்.
நன்றி: சமயம்.காம்
விவாகரத்துக்குப் பிறகும் ரகுவரன் செய்த உதவிகள்… மனம் திறந்த ரோஹிணி!
வில்லன், ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை என்று அனைத்திலும் முத்திரை பதித்தவர் நடிகர் ரகுவரன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலவிதமான பேச்சுக்கள் இருந்த நிலையில் நடிகை ரோஹிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏழு, எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி பின்னர் பிரிந்தது.
வில்லன், ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை என்று அனைத்திலும் முத்திரை பதித்தவர் நடிகர் ரகுவரன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலவிதமான பேச்சுக்கள் இருந்த நிலையில் நடிகை ரோஹிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏழு, எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி பின்னர் பிரிந்தது.
இந்த நிலையில் ரகுவரன் பற்றிய நினைவுகளை நடிகை ரோஹிணி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “நானும் அவரும் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டோம். ஆண் குழந்தை பிறந்த நிலையில் எங்களுக்கு இடையே விவாகரத்து ஆனது. அப்போது முதல் தனி ஆளாக என் மகனை வளர்த்து வருகிறேன். குடும்ப வாழ்விலிருந்து பிரிந்தாலும் நானும் ரகுவரனும் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். விவாகரத்துக்குப் பிறகு ஒரு முறை படப்பிடிப்பு முடித்து ரயிலில் வந்தபோது டிக்கெட் தொலைந்து விட்டது. நான் யார் என்று தெரிந்தும் கூட டிக்கெட் பரிசோதகர் கீழே இறங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். உடனே, நான் ரகுவரனுக்கு போன் செய்து சென்னேன். அவர் டிடிஆரிடம் பேசினார். என்ன பேசினார் என்பது தெரியாது ஆனால் நாங்கள் மீண்டும் ரயிலில் பயணிக்க அவர் அனுமதித்தார். இப்படி நிறைய சூழ்நிலைகளில் அவர் உதவினார்.
மகன் படிப்பு செலவுக்காகப் பணம் தேவைப்பட்டது. இதனால் மீண்டும் நடிக்க வந்தேன். இப்போது என் மகன் அமெரிக்காவில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றுவிட்டான். இனிமேல் எனக்குக் கவலையில்லை. நடிக்க வேண்டிய அவசியமில்லை. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடலாம்” என்றார்.
இணையத்தில் இருந்து எடுத்தது