ஆவடி பகுதியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக “16 ஆம் ஆண்டு தமிழா தமிழா குழந்தைகளின் கொண்டாட்டம்

ஆவடி- ஏப்.09
.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக “16 ஆம் ஆண்டு தமிழா தமிழா குழந்தைகளின் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சி” ஆவடியில் உள்ள SB பாபு ரெட்டியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கம் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலை நேர திறன் வளர மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியம் வளர்ச்சிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கோமளா சிவகுமார் அவர்களின் தலைமையில் நடந்தத்து. சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் அல்லாபகேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சின் சிறப்பு விருந்தினராக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுக்கு கல்வி நல உதவிகளை செய்து, சிறப்புரையாற்றினார். தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையையும் அருமையாக எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வீல்ஸ் இந்தியா ஆலோசகர் சந்திரசேகர்,அக்ஷயா ட்ரஸ்ட் சரஸ்வதி அம்மாள்,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தலைவர் தோழர் சுபாஷ் ,நடிகை நேத்ரஸ்ரீ , மலருங்கள் பவுண்டேசன் லிங்கேஸ்வரன், முன்னாள் வார்டு உறுப்பினர் குமார்,செந்தில் மற்றும் தென்பாண்டியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
குழந்தைகளின் கொண்டாட்டத்தில் ஆவடி முனிசிபல் ஆரம்பள்ளி குழந்தைகளின் வரவேற்பு நடனம் அருமையாக அமைந்து,
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் குழந்தைகளின் மண் சார்ந்த நடனம் மனதை நிகழச் செய்தது அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சிலம்ப கலை குழுவின் குழந்தைகளின் சிலம்பமும் பெரியவர்களின் சிலம்பமும் மனதை உருடியது. இதனைத் தொடர்ந்து ஆர்வம் கலைக்குழுவின் தார தம்பட்டம் அனைவரையும் ஆட்டம் போட செய்தது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டியூட்டின் மாணவர்களின் நாடகம் மிகவும் அருமையாக அமைந்தது.ஜெயகிருஷ்ணன் குழுவின் மைம் ஷோ அருமையான விழிப்புணர்வு தந்தது. மற்றும் சிலம்பக் கலைகளை பலரும் அரங்கேற்றினர் .சிலம்பத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அப்துல் ரகுமான் அவர்களின் சிலம்பாட்டம் பசியை மறந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. மொத்தத்தில் பாரம்பரிய கலை திருவிழாவாக அமைந்தது. கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது சிறப்பு சேயை புரிந்தோர்களுக்கு விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.