இலக்கியம்

குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் கபிலர்.

தமிழ் என்றும் அமிழ்தே -(

குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் கபிலர். இவர் பறம்புமலைப் பாவேந்தர் வள்ளல் பாரியின் நண்பர்.

கவிஞர்கள் பாடல் எழுதுவர். அப்போதைக்கப்போது பாக்களில் பூக்கள் சில சொற்களை அமையும்.

பூக்களையே பாக்களாய் பாடிய குறிஞ்சிப் பெருங்கவிஞர் கபிலர் அவர்கள்.

” யாருமில்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தா ளன்ன சிறு பசுங்கால

ஒழுகு நீராரல் பார்க்கும்

குருகு முண்டுதான் மணந்த ஞான்றே”.

குறிஞ்சிப் பெருங்கவிஞர் கபிலரின் பாடலுடன் சங்கத்தமிழ் கலைஞர் அய்யா உரையையும் அறிவோம்.

” மணக்க மணக்க மலருது முல்லை – என்னை மணந்ததாகச் சொன்னவர் இன்னும் வரவில்லை!

மணற்பரப்பில் செடி கொடி மறைவில் அவரென் மடியில்: கணப்பொழுதும் அகலாதிரு கண்ணா என: நானவர் பிடியில்!

அணைத்து மகிழ்ந்து அளவில்லா அன்பினைப் பொழிந்து: ஈருடல் இணைத்து கிடந்து: இமையென அவரும் விழியென நானும்:

விளக்கிட முடியாத இன்ப விருந்தினை அருந்தி : விந்தைகள் ஆயிரம் புரிந்ததை மறந்து –

வேதனைத் தீயில் எனைக் கருக்கிடும் தலைவன்- இனியும் சோதனை செய்தல் ஆகுமோ தோழி!

ஓருயிராய் நாங்களாகி உலகத்தை மறந்தும் பொய்யா?
ஆருயிரே: உனை மணந்தேன் என அவர் உறுதி அளித்ததும் பொய்யா?

உறுதி வழங்கியமைக்கு உண்டோ சாட்சியம்? உரைத்திடுக! என நீ வினவுகின்றாய் தோழி -அங்கே

எனை அனைத்திருந்த அவரே தான் சாட்சி: அவர் பனை வைரத் தோளில் நான் முகம் பதித்திருந்தபோது

திளைத்தாள் போல் கால் கொண்ட நாரை யொன்று – தீனியாகக் கிடைக்காதோ ஆரை மீன் என்று :

ஓடுகின்ற நீரை உற்றுப் பார்த்தபடி நின்றதடி!
ஒரு கால் அது எம்மை பார்த்திருந்தால் தவிர

களவு மணம் புரிந்த மாட்சிக்கு,
இல்லையடி : கண்கண்ட மற்றோர் சாட்சி!”
என அழுதாள்

தலைவி தோழியின் கரம் பிடித்து என்னுயிரை விரைவில் அழைத்து வா என தொழுதாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button