இலக்கியம்

மே 22, – சர்வதேச பல்லுயிர் தினம்

இந்த மே 22, – சர்வதேச பல்லுயிர் தினம் – (International Day for Biological Diversity)

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

“பல்லுயிர் மற்றும் தண்ணீர்’ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. மனிதன், பல்லுயிர் மற்றும் இயற்கை என அனைத்துக்கும் தண்ணீர் அவசியம். பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, “பல்லுயிர் பரவல்’ எனப்படுகிறது இந்தியாவில் இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றில் பலவகையான மருத்துவ குணமிக்க தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில் ஏரளாமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. நாட்டில் பல வகையான காடுகளும் உள்ளன. இவற்றில் வாழும் பலவகையான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் வாழத் தகுதியாக இருக்கும்

May be an image of slow loris and text that says "பல்லுயிர் பெருக்க நாள் INTERNATIONAL DAY FOR BIODIVERSITY மே 22"

All reactions:

77

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button