வெறும் 319 ரூபாய் தான்.. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ் சேவை தொடக்கம்/சென்னை

சென்னைக்கு வேறலெவல் குட்நியூஸ்.. வெறும் 319 ரூபாய் தான்.. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ் சேவை தொடக்கம்
கிரீன் மொபிலிட்டி’ என்ற நிறுவனம் ‘நியூகோ’ என்ற பெயரில் சென்னையில் இருந்து புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதி போன்ற வேறு மாநில நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் இன்டர்சிட்டி பேருந்து சேவையை தொடங்கி உள்ளது. இந்த பேருந்துகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்சார பேருந்துகள் ஆகும். ‘கிரீன் மொபிலிட்டி’ நிறுவனம் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இன்டர்சிட்டி பேருந்துகளை இயக்கி வருகிறது. பெங்களூரு – திருப்பதி மற்றும் ஹைதராபாத் – விஜயவாடா ஆகிய தடங்களில் இந்நிறுவனம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் ‘கிரீன் மொபிலிட்டி’ நிறுவனம் ‘நியூகோ’ என்ற பெயரில் முதல் முறையாக மின்சார பேருந்து சென்னையில் இருந்து புதுச்சேரி, பெங்களூரு மற்றும் திருப்பதி ஆகிய நகரங்களுக்கு இடையே முதல் மின்சார இன்டர்சிட்டி பேருந்து சேவையை துவக்கி உள்ளது. சென்னையில் இருந்து மூன்று முக்கிய தென் இந்திய நகரங்களை இணைக்கும் வகையில் இச்சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பேருந்து மிக சிறப்பான வசதிகள் கொண்டவை. மின்சார பேருந்துகள் என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஒரு நாளைக்கு, திருப்பதிக்கு, 12 பேருந்துகளும், பெங்களூருவுக்கு, 30 பேருந்துகளும், புதுச்சேரிக்கு, 12 பேருந்துகளும் செல்கின்றன. ஒரு டிக்கெட்டின் ஆரம்ப விலை, 319 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து, ‘கிரீன் மொபிலிட்டி’ நிறுவனத்தின் ‘நியூகோ’ போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது.இந்த பேருந்துகளுக்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது. இந்த பேருந்து சேவையை பயன்படுத்த, நியூகோ பிராண்டின் வலைதளத்திலோ https://nuego.in/, ரெட் பஸ், பேடிஎம், அபி பஸ் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களின் மூலமோ முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.