அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங்


கொலைசெய்யப்பட்ட நாளின்று
அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் கொலைசெய்யப்பட்ட நாளின்று:©
சரித்திரத்தில் எத்தனையோ வீழ்ந்து கிடந்த இனங்களை தலை நிமிர்த்திவிட்ட பலரின் கதைகளை படித்து இருப்பீர்கள் வீழ்ந்த எத்தனையோ தேசிய இனங்கள் தன்முனைப்புடன் எழுந்து இருக்கின்றன.
நிறத்தை காரணம் காட்டி கருப்பர்கள் என்று வெறுத்து ஒதுக்கிய அமெரிக்க தேசத்தில் ‘மார்டின் லூதர் கிங்’ எனும் போராளி பிறந்தான் அடிமை பட்டுக்கிடந்த தனது இனத்தை தட்டி எழுப்பி நிறவெறிக்கு எதிராக கறுப்பின மக்களை ஒருங்கிணைத்து காட்டினான்.
அதுவரை அடிமைகளாகவும் அவமானத்தின் சாட்சிகளாகவும் வாழ்ந்துவந்த கருப்பின மைந்தர்களை சுயமரியாதையோடு நிமிர்ந்து நிற்க மார்டின் லூதர் கிங் துவக்கப்புள்ளியாக விளங்கினார்.
மார்டின் லூதர் கிங்கிற்கு பிந்தைய தலைமுறை அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் சாதித்தது. மைக்கேல் ஜாக்சன் என்ற இசைக்கலைஞனே அதற்கு சான்று.
அமெரிக்கா மாத்திரமன்றி உலகின் பெரும்பாலான இசை ரசிகர்களின் உள்ளத்தை வென்ற கலைஞன் அவனே! தனது கலை வடிவை நிறவெறிக்கு எதிராக ஆயுதமாக ஏந்தினான். They Don’t care about us என்று உலகின் ஏதோவொரு மூலையில் மைக்கேல் ஜாக்சனின் குரல் இன்னும் ஒலித்து கொண்டுத்தான் இருக்கிறது.
அவர்களின் எழுச்சி அமெரிக்காவின் வெள்ளைமாளிகைவரை தொடர்ந்திருக்கிறது. வெள்ளைமாளிகையில் ஒபமா என்ற கருப்பின மனிதனை ஜனாதிபதியாக ஏற்று கொண்டதன் மூலம் அமெரிக்க மக்கள் தாங்கள் இனவெறிக்கு ஆதரவானவர்கள் அல்ல என்று உலகத்திற்கு சொல்லி இருக்கிறார்கள்(சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்) .
மார்டின் லூதர் கிங்கின் போராட்டத்தின் நீட்சியாகத்தான் இதனை நாம் பார்க்க வேண்டும். இன்று திடீரென்று உலகம் மாறிவிடவில்லை மார்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் போராட்டம் மாந்த சமூகத்தின் பார்வையை மாற்றிக்காட்டி இருக்கிறது