புகை உடலுக்கு பகை: வேண்டாம் புகையிலை – இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது
நுரையீரல், குரல்வளை வாய், உணவுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், பெருங்குடல் மற்றும் கருப்பை வாய், அத்துடன் கடுமையான மைலோயிட் லுகேமியா போன்ற பல வகையான புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடு மற்றும் அதன் நுகர்வு முக்கிய காரணமாகும்.
புகையிலை நுகர்வு காரணமாக ஆண்டுக்கு 1 கோடி பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
புகையிலை ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் பல வழிகளில் மோசமாக பாதிக்கிறது.
இந்த ஆண்டு, 2023, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “ எங்களுக்கு தேவை உணவு *புகையிலை அல்ல ” என்பதாகும்