உள்நாட்டு செய்திகள்சினிமாசெய்திகள்

அபூர்வ சகோதரர்கள் .. வசனத்தால் பிரபலமான ஆர்எஸ் சிவாஜி உயிரிழந்தார்

அபூர்வ சகோதரர்கள் .. வசனத்தால் பிரபலமான ஆர்எஸ் சிவாஜி உயிரிழந்தார்!

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்த ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயசு 66.

தயாரிப்பாளர் எம். ஆர். சந்தானம் மற்றும் ராஜலட்சுமியின் மகனான அக்டோபர் மாதம் 26ந் தேதி பிறந்தார் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதி நடிகரும், திரைப்பட இயக்குநராக இருக்கிறார். அவர் அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பனாக நடித்து பாராட்டை பெற்றார்.

நடிகர், இணை இயக்குநர், ஒலி வடிவமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட ஆர்.எஸ். சிவாஜி பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடிகராக அறிமுகமானார். கமல் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வச கோதரர்கள் திரைப்படத்தில், ஜனகராஜூடன் போலீஸ் கான்டஸ்பிளாக வரும் இவர், சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க என்ற ஒரே ஒரு வசனத்தை சொல்லி பிரபலமானார்.

அதன் பின் மைக்கேல் மதன காமராஜன், மை டியர் மார்த்தாண்டம், குணா, கலைஞன், மகளிர் மட்டும், பவித்ரா,வியட்நாம் காலணி, பம்பல் கே சம்மந்தம், அன்பே சிவம் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குறிப்பாக கமல்ஹாசனின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்கி பட வில்லன்: கிடைத்த கதாபாத்திரத்தில் முத்திரையை பதித்து நல்ல நடிகர் என பெயர் எடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக பிரபலமானார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரமும், நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன. இதைத்தொடர்ந்து கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்த்தி திரைப்படத்தில் ஓர் மர்மமான வில்லனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று அவர் நடிப்பில் லக்கிமேன் திரைப்படம் வெளியான நிலையில் இன்று அவர் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button