10 மடங்கு உயர்ந்த ஜெயிலர் டிக்கெட்/ . ஒரு டிக்கெட்டின் விலை 3000/ காணாமல் இருக்கும் ரெட் ஜெயண்ட்

ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என தான் ஆசைப்படுவார்கள்
பொழுதுபோக்குக்காக நடத்தப்பட்டு வரும் திரையரங்குகள் தற்போது வியாபார ரீதியாக மேற்கொள்ளும் அநியாய சம்பவம், அந்தப் பக்கம் தலைவைத்து படுக்கமுடியாத அளவிற்கு இருந்து வருகிறது. தற்பொழுது ஜெயிலர் படத்தின் டிக்கெட் விலை குறித்த தகவலை இங்கு காண்போம்.
இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தான் ஜெயிலர். பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி 10ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் பல பிரபலங்கள் இடம்பெறுவதால் இப்படத்தின் சஸ்பென்ஸ் குறித்து எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் இடம்பெறும் காவலா பாடல், படம் ரிலீஸ் இருக்கு முன்பே பட்டையை கிளப்பி வருகிறது. இது போன்ற பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய படத்தை காண அதிகாலையில் ஸ்பெஷல் ஷோ இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது போன்ற நிறைய அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில் அதிகாலை காட்சிகளை ரத்து செய்ய கவர்மெண்ட் திரையரங்குக்கு ஆடறிட்டது. இது ஒரு பக்கம் வரையறுக்க தகுந்த மாதிரி இருந்தாலும், இதைவிட பல அநியாயங்களை திரையரங்குகள் செய்து வருகின்றன.
தீவிர ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என தான் ஆசைப்படுவார்கள். அவ்வாறு இருக்க, தற்போது இவர்கள் தலையில் இடியறக்கும் விதமாய், ஃபர்ஸ்ட் ஷோவின் டிக்கெட்டின் விலை வெளியாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 3000 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளதாம்.