சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்.. வியக்கவைக்கும் வகையில் உருவாகும் Fintech City..!!!

சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்.. வியக்கவைக்கும் வகையில் உருவாகும் Fintech City..!!!
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடியாக இருக்கும் மாநிலங்களில் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு, அடுத்தக்கட்டத்திறக்கு செல்லும் திட்டத்துடன் சென்னையில் மிகப்பெரிய Fintech City-ஐ மாபெரும் முதலீட்டில் கட்டமைக்க உள்ளது. இந்த மாபெரும் திட்டத்திற்காக TIDCO சுற்றுசூழல் ஒப்புதலை பெறுவதற்காக விண்ணப்பத்துள்ளது.
சென்னையில் நந்தம்பாக்கம் பகுதியில் Fintech City சுமார் 56 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. சுமார் 2,349 கோடி ரூபாய் முதலீட்டில் 14 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு கட்டிடமும் 12 மாடி அளவில் கட்டப்பட உள்ளது மட்டும் அல்லாமல் 15ல் 14 கட்டிடங்கள் அலுவலக பகுதியாகவும், 1 கட்டிடம் குடியிருப்பு வளாகவமாகழும் இருக்கப்போகிறது.

இந்த மாபெரும் Fintech City திட்டத்தின் வாயிலாக சுமார் 67000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது, ஜனவரி மாதமே இத்திட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில், கட்டுமான பணியில் முக்கியமான இடத்தை எட்டியுள்ள காரணத்தால் TIDCO சுற்றுசூழல் ஒப்புதலை பெறுவதற்காக விண்ணப்பத்துள்ளது.
தமிழ்நாடு பல துறையில் பெரிய வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஃபின்டெக் துறை மூலம் புதிய வளர்ச்சி பாதையை அமைக்கப்பட உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் சென்னையைத் இந்தியாவின் பின்டெக் துறைக்கான தலைநகராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
இதன் ஒரு பகுதியாக ஃபின்டெக் நிறுவனங்களின் முன்னணி உலகளாவிய இடமாக மாற்றும் நோக்கில் ‘FinTech Policy 2021’ஐ முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் தமிழகத்தில் முதல் படியை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி துவக்கி வைத்தார் என்றால் மிகையில்லை, உலக நாடுகளுக்கு இணையாக சென்னையில் ‘டைடல் பார்க்’ கட்டியதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.
இதன் பின்பு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்ப கட்டமைப்பை அடிப்பட்டத்தில் இருந்து உருவாக்கியதன் விளைவு இன்று மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்திய அளவில் டாப் 5 மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. ஐடி துறை வளர்ச்சிக்கு மு.கருணாநிதி முதல் அனைத்து முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் கவனத்தை செலுத்தி தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த பாதையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐடி மற்றும் மென்பொருள் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப பின்டெக் துறையை தேர்வு செய்து தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய உருவத்தை கொடுத்துள்ளார். நிதி வல்லுனர்களின் கருத்துப்படி, பொருளாதாரம், வர்த்தகம் அனைத்தும் எதிர்காலம் ஃபின்-டெக் துறையை சார்ந்துள்ளது என கூறுகின்றனர்.