உள்நாட்டு செய்திகள்

ரயில் பயணிகளே கவனம்., எல்லாம் மாறிடுச்சு

ரயில் பயணிகளே கவனம்., எல்லாம் மாறிடுச்சு, இது தெரியாம Train ல ஏறாதீங்க! நிர்வாகம் வார்னிங்!!

ரயில் பயணிகள், தங்கள் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சில முக்கிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

நாடு முழுவதும், ரயில் பயணங்களின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகளை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில் பயணிகள் தங்கள் ரயிலுக்குள் இருந்து மது அருந்தவோ புகைபிடிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் பயணிகளிடம், டிக்கெட் பரிசோதகர் இரவு 10 மணிக்கு மேல் பரிசோதனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரயில் பெட்டியிலோ அல்லது இருக்கையிலோ அமர்ந்து சத்தமாக போன் பேசவோ, headphone இல்லாமல் சத்தமாக பாடல், வீடியோ போன்றவற்றை கேட்கவோ, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் குழுவாக அமர்ந்து இரவு 10 மணிக்கு மேல் அரட்டை அடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணிக்கு மேல், இரவு விளக்கை தவிர வேறு எந்த விளக்கை எரிய வைக்க கூடாது எனவும், ஆன்லைனில் ஆர்டர் மூலம் இரவு 10 மணிக்கு பின் உணவு வழங்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.

உணவு தேவைப்படுவோர் முன்கூட்டியே, தங்கள் உணவை ஆர்டர் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ரயில்களின் வசதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு எடையுடன் லக்கேஜ்களை மட்டுமே பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் IRCTC அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button