தமிழ்நாடு
வேளாண்பட்ஜெட் 2023

தமிழ்நாடு
வேளாண்பட்ஜெட் 2023
🔹🔸“60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்” – வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
🔹🔸மதுரை மல்லிப்பூ உற்பத்தியை அதிகரிக்க ₹7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்!
🔹🔸“சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு”
- வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
🔹🔸கோவையில், கருவேப்பில்லை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ₹2.5 கோடி ஒதுக்கீடு!
✒️கடலூர், குமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ₹3 கோடி நிதி ஒதுக்கீடு;
✒️5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு!
🔹🔸தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும்
🔹🔸“தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை உயர்த்திட ₹11 கோடி ஒதுக்கீடு”
✒️இத்திட்டம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில், ₹19 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்
🔹🔸₹650 கோடியில், 53,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்!
✒️நுண்ணீர் பாசன முறையை பின்பற்றி நிலத்தடி நீரை சரியாக பயன்படுத்தி அதிக சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
🔹🔸10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி
✒️அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
✒️25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
✒️தஞ்சையில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.