பங்குனி உத்திர திருநாள் 05.04.2023உள்ளூர் விடுமுறை

தென்காசி:
பங்குனி உத்திர திருநாள் 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தகவல்
அன்று அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் .
வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் .
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில்
06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேவை நாளாக அறிவிக்கப்படுகிறது.