சினிமா

சீர்காழி எஸ். கோவிந்தராஜன், மறைந்த தினமின்று!

🎬

சீர்காழி எஸ். கோவிந்தராஜன், மறைந்த தினமின்று!

சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார்
கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள்.

பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது..

கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன்.
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88)

சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம் பொங்கும் பாடல்களையும் விரும்பிக் கேட்கலாம்.
அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு – தைபிறந்தால் வழி பிறக்கும்
மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம்,மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும் மலர்ந்து வரும் ஆசை விழியோடு மன்மதன் வந்தான் தேரோடு….இங்கே .. காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட் – ஒளிவிளக்கு வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம் போடுதடி – பழனி அன்பே என் ஆரமுதே வாராய் / தென்றலலை மீதினிலே திங்கள் பிறை தோணியினிலே தேன்மொழி உனை அழைத்தே செல்வேனே – கோமதியின் காதலன் கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே 0 பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ இங்கு குயில போல பாட்டு வந்தது பாடியது யாரோ மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது அடியது யாரோ – வாழ்க்கைப் படகு

From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button