சாப்பிடும் மக்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சி

சென்னை ப்ராட்வே பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலே இரண்டு பேர் பூனைகளை பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருப்பதை கண்ட விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி என்பவர் ஏழு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிச்சார். புகாரின் அடிப்படையில் ஏழு கிணறு காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் 11 பூனைகளை மீட்டு திருவள்ளூர் அடுத்த அம்மம்பாக்கம் பகுதியில் விலங்குநல பராமரிப்பு மையம் நடத்தி வரும் சீராணி என்பவரிடம் ஒப்படைச்சாய்ங்க
போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையின் பல்வேறு வீடுகளில் ஆசையாக உரிமையாளர்கள் வளர்க்கும் பூனைகளின் தோலை உரித்து மட்டன் இறைச்சி உடன் கலந்து விற்றது அம்பலமானது. இதற்காக நரிக்குறவர்கள் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று வலை வீசி பூனைகளை பிடித்து வந்ததாக போலீசார் தெரிவிச்சாய்ங்க.
தமிழக தலைநகர் சென்னையில் அயனாவரம், சவுக்கார்பேட்டை, திருவான்மீர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் குறைவான விலைகளுக்கு பூனை இறைச்சியை நரிக்குறவர்கள் விற்று வருவதாகவும், குறிப்பாக வீடுகளில் பிடிக்கப்படும் பூனைகளை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் அதிக அளவில் விற்று வந்ததும் தெரியவந்துருக்கு
எல்லா ஹோட்டல்களிலும் இதுபோல் நடப்பது இல்லை என்றாலும் சில ஹோட்டல்களில் நரிக்குறவர்களிடம் வாங்கும் எலும்பில்லா பூனைக்கறியை மட்டன் உடன் கலந்து மட்டன் கோலா உருண்டை, மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா உள்ளிட்டவற்றை விற்பது தெரியவருது.மட்டன் இறைச்சியை போன்றே பூனைக்கறியும் ஒரே பதத்தில் இருப்பதால் இதை செய்வதாக கூறப்படுது.
ஆக தமிழக ஹோட்டலில் சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் மட்டனை விரும்பி சாப்பிடும் மக்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியை கொடுத்துருக்குது