உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சென்னையில் தனியார் பேருந்து விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

  • சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது.
  • உலக வங்கி டெண்டர் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்க அறிக்கை கொடுக்க வேண்டும்.
  • தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள்.
  • தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கவே திட்டமிடப்பட்டுள்ளது.
  • நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது.
  • அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது.
  • தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
  • தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசின் நகர பேருந்துகளில் வழங்கப்படும் சலுகைகள் தொடரும்.
  • தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது.
  • போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
  • தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது. மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் நிறுத்தப்படாது.
  • சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
  • டீசல் விலை உயரும்போதெல்லாம் கர்நாடகா மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் எந்தவித கட்டண உயர்வுமின்றி பேருந்து சேவையை அரசு வழங்கி வருகிறது.
  • அ.தி.முக. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமே இந்த தனியார் பேருந்து சேவை திட்டமாகும்.
  • தனியார் பேருந்து எந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும், எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அரசே நிர்ணயம் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button