உருளைக்கிழங்கில் இனி இப்படி ஸ்னாக்ஸ்

உருளைக்கிழங்கில் இனி இப்படி ஸ்னாக்ஸ்
குழந்தைகளுக்கு ருசியா என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இப்படி ஸ்னாக்ஸ் செஞ்சி வைத்து கொடுத்து பாருங்க
உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் | Potato Snacks Recipe In Tamil குழந்தைகளுக்கு ருசியா என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் யோசிக்கிறீர்களா
உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இப்படி ஸ்னாக்ஸ் செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் எப்பொழுது செய்விங்க என்று கேட்டு தொல்லை பண்ணுவாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.,
உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ்
Equipment 1 கடாய் தேவையான பொருட்கள் ▢5 உருளைக்கிழங்கு ▢2 டீஸ்பூன் கான்ப்ளவர் மாவு ▢2 டீஸ்பூன் அரிசி மாவு ▢வர மிளகாய் கோர கொரப்பாக அரைத்தது கரத்திற்கேற்ப்ப ▢கருவேப்பிலை பொடியாக நறுக்கியது கொஞ்சம் ▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை செய்முறை ▢ முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்துக்கொள்ளவும். ▢ மசித்ததும் அதில் கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, மிளகாய், தேவையான அளவு உப்பு, நறுக்கிய கருவேப்பிலை, சேர்த்து நன்கு பிசைந்து தேவையான வடிவில் செய்து வைத்துக்கொள்ளவும். ▢ அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.