கேலரிசினிமாசெய்திகள்

எல்லா அலப்பறையும் படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும்

எல்லா அலப்பறையும் படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் தான்.. உசுரை கொடுத்து பேசியதே அதை குறி வைத்துதானாம்

இந்த முறையும் அந்த இயக்குநர் தேவையில்லாத எக்ஸ்பீரியமென்ட்டை தான் உச்ச நடிகரை வைத்து செய்துள்ளார் என்றும் எல்லா அலப்பறைகளும் படம் வெளியாகும் வரை தான் என அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.

ஏகப்பட்ட படங்களில் இருந்து காட்சிகளை உருவியே இந்த படத்தை அந்த காமெடி இயக்குநர் உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

நடிகர் சமீபத்தில் உசுரை கொடுத்து அத்தனை நேரம் நின்று பேசியதற்கு காரணமே வசூலில் எப்படியாவது படத்தை வெற்றியடைய வைத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் தான் எனக் கூறுகின்றனர்.

பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமாவது தியேட்டருக்கு வந்து பாருங்க என்கிற அளவுக்கு உச்ச நடிகர் பேச காரணமே அவருக்குள் வந்த பாக்ஸ் ஆபிஸ் பயம் தான் என்கின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை பல விஷயங்களை உள்ளடக்கி உள்குத்தாக நடிகர் பேசியதற்கு காரணமும் அவர் சொன்ன கதைக்கும் வசூல் ஒன்று தான் குறிக்கோளாக இருக்கிறது என்றும் படத்தின் மீது நம்பிக்கை இருந்திருந்தால், நடிகர் அப்படியெல்லாம் பேசியிருக்கவே மாட்டார் என்றும் இன்னமும் போல்டான சுருக்கமான பேச்சாக இருந்திருக்கும் என்றும் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

நடிகரின் படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் படத்தை பார்க்க எப்போதும் போல ஆர்வத்துடன் தான் இருப்பார்கள், அதே போலத்தான் இந்த முறையும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்த ரசிகர்களையும் முதல் வாரத்திலேயே திரட்டிக் கொண்டு தியேட்டர் முன் நிறுத்த வைக்கவே நடிகர் அப்படியொரு பேச்சை பேசியிருக்கிறார் என்றும் ஆனால், படத்தில் அந்தளவுக்கு எந்தவொரு வெயிட்டேஜும் இல்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த படமே கிடைக்கல: உச்ச நடிகரின் படத்தை இயக்கி முடித்த நிலையிலும் அந்த இயக்குநருக்கு இன்னமும் அடுத்த பட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் இருப்பதற்கு காரணமே அவரது சொதப்பல் தான் என்றும் எதிலும் சரியான சிரத்தை இல்லாமல் ஏனோ தானோவென உச்ச நடிகர் படத்தையும் எடுத்து முடித்த விஷயம் சினிமா வட்டாரத்தில் பரவிய நிலையில், தான் டாப் ஹீரோக்கள் இன்னமும் அந்த இயக்குநரை அணுக தயங்குகின்றனர் என அந்த பிரபலம் கூறியுள்ளார். படம் வெளியான பிறகு தான் வேடிக்கையே இருக்கு என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. ஆனால், அந்த பிரபலம் மாஸ் நடிகரின் நல விரும்பி என்றும் அதனால் தான் இப்படி பேசியுள்ளார் என்றும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், சீக்கிரமே உண்மை தெரிந்து விடும்.

உச்ச நடிகர் படம் ரிலீஸ் வரை தான் அலப்பறை இருக்கும் என்றும் ரிலீசுக்கு பிறகு அந்த அலை ஓய்ந்து விடும் என பிரபலம் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

thanks https://tamil.filmibeat.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button