உள்நாட்டு செய்திகள்

சுட்டு தள்ளிய துணிச்சல் எஸ்ஐ மீனா.. குவியும் பாராட்டு

சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனாவை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனாவை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார். சினிமா பாணியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனா (34) செங்கல்பட்டை பூர்வீகமாக கொண்டவர். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சிறந்த பணிக்காக இவர் ஏற்கெனவே 2 முறை காவல் ஆணையரிடம் பதக்கம், சான்றிதழ் பெற்றிருக்கிறார்

சென்னை அயனாவரத்தில் அதிகாலை 4 மணி அளவில் 4 போலீஸாருடன் அயனாவரம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரிக்க முயன்றனர். அப்போது, அந்த வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் எஸ்.ஐ. சங்கரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில், படுகாயம் அடைந்த சங்கர் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். அவரை சக போலீஸார் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய இளைஞர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பினர்.

இச்சம்பவம் பற்றி அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தியது பிரபல கொள்ளையனான புளியந்தோப்பு திருவிக நகர் பள்ளம் பகுதியை சேர்ந்த பெண்டு சூர்யா (எ) சூர்யா (22) என்பதும், அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தது திருநின்றவூர் நெமிலிச்சேரி கவுதம் என்ற மோகன் (20), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அஜித் என்ற பீக்கா (20) என்பதும் தெரியவந்தது. இதில் கவுதம், அஜித் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

ஆனால் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய சூர்யா மட்டும் தலைமறைவாக இருந்தார். சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக சுற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ. மீனா தலைமையிலான தனிப்படை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அயனாவரம் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 11.30 மணி அளவில் அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் வரும்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என சூர்யா கூறியிருக்கிறார். அதற்கு போலீஸார் அனுமதித்துள்ளனர். இதையடுத்து ஒதுக்குப்புறமாக சூர்யா சென்றுள்ளார். போலீஸார் அவருக்காக காத்திருந்தனர். அப்போது சூர்யா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், தலைமைக் காவலர் சரவண குமார், முதல்நிலை காவலர் அமானுதீனின் கை, கால்களில் வெட்டுக்காயம் விழுந்தது. காவலர் திருநாவுக்கரசு இதில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதற்கிடையே, போலீஸாரின் அலறல் சத்தம் கேட்டு, காவல் வாகனத்தில் அமர்ந்திருந்த எஸ்.ஐ. மீனா உடனடியாக அவர்களை நோக்கி ஓடியுள்ளார். தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சூர்யாவை எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி சுட்டார். சூர்யா தப்பி ஓட முயன்றதால், அவரை நோக்கி எஸ்.ஐ. மீனா சுட்டார். இடதுகால் முட்டியில் குண்டு பாய்ந்ததில், ரவுடி சூர்யா கீழே சுருண்டு விழுந்தார்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்த 2 போலீஸாருடன், ரவுடி சூர்யாவையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே விஷயத்தை கேள்வி பட்டு ,சிகிச்சை பெற்று வரும் 2 காவலர்களையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கமிஷ்னர் பாராட்டு சினிமா பாணியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனா (34) செங்கல்பட்டை பூர்வீகமாக கொண்டவர். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சிறந்த பணிக்காக இவர் ஏற்கெனவே 2 முறை காவல் ஆணையரிடம் பதக்கம், சான்றிதழ் பெற்றிருக்கிறார். இதனிடையே மீனாவை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினர். முதன்முதலாக பெண் எஸ்.ஐ. துப்பாக்கிச்சூடு நடத்தி சாதனை படைத்திருப்பதாக போலீசார் பாராட்டினர்

thanks tamil.oneindia.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button