சினிமா

500 கோடி வசூலித்தாலும், அது சாராயம் வித்ததுக்கு சமம்.. /ரஜினி, விஜய்யை கடுமையாக விமர்சித்த இயக்குனர்

ரஜினி, விஜய்க்கு உரைக்கும் படி கடுமையாக விமர்சித்திருக்கிறார்

500 கோடி வசூலித்தாலும், அது சாராயம் வித்ததுக்கு சமம்.. ரஜினி, விஜய்யை கடுமையாக விமர்சித்த இயக்குனர்

ரஜினி, விஜய்க்கு உரைக்கும் படி கடுமையாக விமர்சித்திருக்கிறார்

தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல் போன்ற ஹீரோக்களின் படங்கள் வசூல் அளவிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படத்தை எந்த மாதிரி கொடுத்தால் வசூல் அளவில் அதிக லாபத்தை பார்க்கலாம் என்று அதையே யோசித்து தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

அதற்கு ஏற்ற மாதிரி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் லாபம் வருகிறது என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகலாம் என்று படங்களை கொடுக்கிறார்கள். இவர்களுடைய நோக்கமே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதை தவிர்த்து எந்த ஒரு நடிகருக்கும் சமூகத்தின் மேல் ஒரு துளி அளவு கூட அக்கறை கிடையாது என்று ரஜினி, விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஒரு இயக்குனர்.

அதாவது 500 கோடி வசூலித்தால் போதும் என்ற நோக்கத்தில், 1000 பேரை ஹீரோ சுட்டுக் கொள்வதும், அதற்கேற்ற மாதிரி துப்பாக்கிகளை விதவிதமாக காட்டிவிட்டால் தற்போது அது பெரிய பட்ஜெட் படமாக மாறிவிடுகிறது. இது போன்ற படங்கள் தான் இளைஞர்கள் மனதில்  தீராத விஷத்தை விதைத்து வருகிறது. இதை பற்றி கேட்டால் படத்தை படமாக பாருங்கள், பொழுதுபோக்கிற்காக நீங்கள் வந்து பாருங்கள் என்று பூசி மழுப்பி விடுகிறார்கள்.

படத்தை படமாக பாருங்கள் என்பதற்கு ஏற்ப குடும்பத்துடன் வந்து பார்க்கிற மாதிரி இப்பொழுது உள்ள படங்கள் இருக்கிறது. எப்போதுமே சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். பெற்றவர்களை மதித்து வாழ வேண்டும், யாரையும் ஏமாற்ற கூடாது, திருடக்கூடாது, பொய் பழக்கங்கள் இருக்கக் கூடாது மற்றும் சிகரெட், மதுப்பழக்கம் இது போன்ற விஷயங்கள் இல்லாமல் நடித்த ஒரே தலைவர் என்னுடைய எம்ஜிஆர் மட்டும்தான் என்று இயக்குனர் அவருடைய ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.

தற்போது முன்னணி நடிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வசூலை எப்படி பெறலாம் என்பதில் மட்டும் கவனத்தை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்களை நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான லாபத்தை பார்த்து வருகிறார்கள் என்று டாப் ஹீரோக்களை கிழித்து தொங்கவிட்டு பேசி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.

அத்துடன் 500 கோடி லாபம் பெறுகிறது என்றால் அது தற்போது சாராயத்துக்கு சமம். சமூகம் தற்போது நடிகர்களால் கெட்டுப் போவதை தாங்க முடியாமல் மனக்குறைகளை கொட்டி தீர்த்து இருக்கிறார். அதாவது தற்போது பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு போன்ற நடிகர்களை வைத்து கருமேகங்கள் கலைகின்றன படத்தை இயக்க உள்ளார். இது சம்பந்தமாக இசை விளையாட்டு விழாவின் போது இந்த விஷயங்கள் அனைத்தையும் ரஜினி, விஜய்க்கு உரைக்கும் படி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button