சினிமா

மென்மையான குரலுக்கு சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல்

“இந்த குரலின் இனிமையை ரசிக்காதவர் உண்டோ” என்று பாராட்ட வைக்கும் மென்மையான குரலுக்கு சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல் அவர்கள் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

19-ற்கும் மேற்பட்ட மொழிகளில் 2300-ற்கும் மேற்பட்ட பாடல்களை ஸ்ரேயா பாடியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு ஆல்பம் திரைப்படத்தில் அமைந்த “செல்லம் செல்லம்” பாடல் தான் ஸ்ரேயா பாடிய முதல் தமிழ் பாடல். இவரின் குரலில் எதோ ஒரு காந்த சக்தி இருப்பதை உணர்ந்த இசையமைப்பாளர்கள் தொடர்ந்து ஸ்ரேயாவை வைத்து பல பாடல்களை Record செய்ய தொடங்கினர்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான் என அனைத்து முன்னணி தமிழ் இசையமைப்பாளர்கள் இசையிலும் ஸ்ரேயா பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இவர் பாடிய “முன்பே வா ” பாடல் பலரின் Whats-app Status-ல் காலங்களை தாண்டியும் வலம் வந்து கொண்டிருக்கிறது. மெலடி பாடல்களை தன் மென்மையான குரலில் பாடும் ஸ்ரேயா, எந்த மொழியில் பாடல்களை பாடினாலும் “தெரியாத மொழியும் தித்திக்குதே உன் குரலில்” என்று சொல்ல வைக்கும் படி இனிமையாக பாடுவார். அந்த வகையில் பிற மொழி பாடல்களையும் தமிழ் ரசிகர்கள் ரசிப்பதற்கு ஸ்ரேயாவின் குரலும் ஒரு முக்கிய காரணம்.

தனது வசீகரமிக்க குரலினால் ஸ்ரேயா கோஷல் இதுவரை 150-ற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். இதுவரை சிறந்த பின்னணி பாடகருக்கான 4 தேசிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் இரண்டு முறை வென்றுள்ளார். இவரது புகழுக்கு சான்றாக, அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் ஜூன் 26, 2010-ஆம் தேதியை அந்த மாநிலத்தின் கவர்னர் “ஸ்ரேயா கோஷல் தினம்”-ஆக அறிவித்தார்.

மெலடி குயில் ஸ்ரேயா கோஷல் மேலும் பல இனிமையான பாடல்களை பாடி நமது Playlist-ல் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என வேண்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

From The Desk of கட்டிங் கண்னையா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button