சினிமா

மக்கள் மனதில் இன்றளவும் ஹீரோ

படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம் ஜெயசங்கர். மிகவும் சாதாரணமாக மிகவும் ஜாலியாக பேசி சிரித்து கொள்ளக் கூடியவராக இருப்பார். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிகவும் கூலாக இருக்கக்கூடிய ஆளாக வலம் வந்திருக்கிறார். மேலும் உடன் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களோடும் அமர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் ஜோக் அடிப்பது என மிகவும் ஜாலியாக இருக்க கூடிய ஆளாக இருப்பார்.

இப்படி இருக்கையில் ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்த பிறகு மழை வந்ததால் படப்பிடிப்பு கேன்சல் ஆனது. யாரும் எதிர்பாராமல் மழை நின்ற பிறகு அந்த இடம் முழுவதுமாக மழை நீரால் நிரம்பியது . அப்போது ஜெய்சங்கர் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாருங்கள் சூட்டிங்கை முடித்து விடுவோம் என்று கூறி ஒரு பக்கெட்டை எடுத்து எடுத்து வந்து அங்கு இருக்கும் தண்ணீரை இரைத்து ஊற்றினார்.

இதைப் பார்த்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு ஹீரோவே, இப்படி களத்தில் இறங்கி விட்டார் நாம் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதா.? என்று கூறி அங்கிருந்த அனைவரும் தண்ணீரை இரைத்து வெளியில் ஊற்றி இருக்கின்றனர். இதனால் நின்றுபோன படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜோராக நடைபெற்று இருக்கிறது. இதை பார்த்த அங்கிருந்த அனைவரும் இப்படி ஒரு ஜென்டில்மேன் தமிழ் திரை உலகிலா என்று மூக்கில் விரல் வைத்து இருக்கின்றனர். அவர் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இன்றளவும் ஹீரோவாக இருப்பதற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் தான் காரணமாக இருக்கிறது.

நன்றி: சினிமாப் பேட்டை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button