சினிமா

கட்ஹல்’ (Kathal பலாப்பழத்தைவைத்துஇப்படியொருஅரசியல்படம்

கட்ஹல்‘ (Kathal பலாப்பழத்தை வைத்து இப்படியொரு அரசியல் படம்

அசோக் மிஸ்ராவுடன் இணைந்து எழுதி யஷோவர்தன் மிஸ்ரா இயக்கியிருக்கும் இந்தி திரைப்படம் ‘கட்ஹல்’ (Kathal ). பலாப்பழம் என  இந்தியில் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

 நெட்பிளிக்ஸ் ஒ ட் ட்டியில் சமீபத்தில் நான் பார்த்தது.

இந்தப்படத்தைப்பற்றி என்னோட அலசல்‘

Kathal என்றதுமே ஏதோ இந்தியில் ஒரு காதல் படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றே  நான் முதலில் நினைத்தேன்.

. ஆனால், இந்தியில் Kathal என்றால் பலாப்பழம்,இந்த  பலாப்பழத்தை வைத்து ஒரு பக்காவான அரசியல் நய்யாண்டி யாக  இந்த படம்  அமர்க்களப்படுத்துகிறது..

 கதையைப்பற்றி
உத்தரப் பிரதேச கிராமம் ஒன்றில் வசிக்கும் உள்ளூர் எம்எல்ஏ ஒருவரின் வீட்டு மரத்தில் இருந்த இரண்டு ஹைபிரிட் பலாப்பழங்கள் களவாடப்பட தாம் தூம் என குதிக்கவே  . இதுகுறித்து வழக்குப் பதிவு செய்கிறது

இந்த வழக்கை விசாரிக்கும் இளம்பெண் காவல் அதிகாரி மஹிமா பஷோர் ,அவரின் தேடல் தான் இந்த பலாப்பழம்

இந்தப் படத்தின் நாயகி சான்யா மல்ஹோத்ரா, அவரது காதலரும் கான்ஸ்டபிளாக வரும் சவுரப் (அனந்த் ஜோஷி),நல்ல தேர்வு

கதையைப்பற்றி,

அந்த வீட்டில் இருந்து தோட்டக்காரன் திடீரென 3 நாட்களாக மிஸ்ஸிங் என்பதை தேடி போலீஸார் அலைய, அந்த தோட்டக்காரரோ தனது 16 வயது மகள் காணவில்லை என காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க சொன்னால், ஹீரோ அவ எவன் கூடயாவது ஓடிப்போயிருப்பா என சொல்லி விரட்டி விடுகிறார். இதற்காக ஹீரோ, ஹீரோயினுக்கு இடையே வெடிக்கும் பிரச்சனை சிறப்பாகவே உள்ளது.

தோட்டக்காரன் சிக்கிய நிலையில், அவனை வைத்து கேஸை முடித்து விட உயரதிகாரி மகிமாவுக்கு உத்தரவு போடுகிறார். அவரும் வேறு வழியில்லாமல் பிரஸ் மீட்டில் தோட்டக்காரனை குற்றவாளி போல அழைத்து வர கடைசியில் அவருடைய மனம் கேட்காமல் அந்த பலாப்பழத்தை இவர் திருடவில்லை என்றும் காணாமல் போன அந்த தோட்டக்காரரின் மகள் தான் திருடிவிட்டார் என வழக்கை திசை திருப்பி அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து விட்டால் காணாமல் போன பலாப்பழத்தையும் கண்டுபிடித்து விடலாம் என சொல்ல அந்த பெண்ணை தேட இவருக்கு அனுமதி ஆட்டோமேட்டிக்காக கிடைக்கிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் இளம்பெண் காவல் அதிகாரி மஹிமா பஷோர் எப்படி சமாளிக்கிறார்? திருடுபோன பலாப்பழம் கிடைத்ததா? யார் திருடியது? தோட்டக்காரரின் பேத்தி எங்கு போனார்? அவருக்கு என்ன நடக்கிறது? அந்த வழக்கை போலிஸார் விசாரணைக்கு எடுத்தார்களா? இல்லையா? – இந்தக் கேள்விகளுக்கான பதில்தான்  மீதித்திரைக்கதை.

. இந்த அரசியல் நையாண்டி  (Political satire) டிராமாவாக நம்மை கலக்க சிரிக்க  வைத்திருக்கிறார் இயக்குநர்.

தற்போதைய அரசியல் சூழலில், உத்தரப் பிரதேசத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டு, அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் ஒரு குற்றத்தை படமாக்கத் துணிந்த இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. அந்தக் குற்றத்தை ஒரு பெண் அதிகாரி, அதுவும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூலம் கண்டுபிடிக்கச் செய்து சாதியின் பெயரால் இறுகித் துருபிடித்து மூடிக்கிடக்கும் கோடிக்கணக்கான கண்களை விழிக்கச் செய்திருக்கிறார் இயக்குநர்.

ஆணாதிக்க, சாதிய பாகுபாட்டையும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையும்  கிண்டல் டி செய்து எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கிறது. அதிலும், குற்றவாளியை தேடிச் செல்லும்போது, “இந்த கீழ்சாதிகாரன்களுக்கு எதையாவது திருடி திண்ணலன்னா தூக்கமே வராது மேடம்என்று ஒருவர் சொல்வார். அதற்கு நாயகி மஹிமா பஷோர், தனது பேட்சை காண்பித்து இதில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்பார். அதற்கு அந்த நபர் நமக்கு எழுதப் படிக்க வராதுங்க என்பார். அமைதிப்படை, எல்கேஜி போல இதுவும் அரசியல் நய்யாண்டி கதை தான்

அதற்கு மஹிமா பஷோர் தனது பெயரைச் சொல்லி, கீழ்சாதி இன்ஸ்பெக்டர், நான் ஒன்னும் திருடி திண்பவள் அல்ல, திருடர்களை ஜெயிலுக்கு அனுப்புகிறவள் என்று வசனத்தின் மூலம் சமூக எதார்த்தத்தை கண்முன் கொண்டு வந்திருப்பார் இயக்குநர். கடைசியில் குற்றவாளிகளைப் பிடிக்கும் இறுதிக் காட்சி சினிமாத்தனமாக இருந்தாலும், கோர்ட் சீன் அதை மறைத்துவிடுகிறது.

திரைப்படங்களில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் பெரும்பாலான படங்களில் மிக  சோகமானதாகவே பதிவு செய்யப்படும்,இந்தப்படம் அப்படியில்லாமல் , ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படத்தின் வழியாக  பார்வையாளர்களை சிரிக்கவைத்து பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் யஷோவர்தன் மிஸ்ரா

. பலாப்பழம் திருட்டு விசாரணையின்போது எம்எல்ஏ வீட்டிற்குள் விசாரிக்க வரும் மஹிமா பஷோர் நின்றுவிட்டு சென்ற இடத்தை  கங்கா தீர்த்தம்விட்டு கழுவச் சொல்லும் எம்எல்ஏ கதாப்பாத்திரம் வழியாக, சாதியின் பெயரால் மனித மூளைகளில் பாசிப் படர்ந்திருக்கும் கசடுகளை கழுவி சுத்தம் செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

இந்த இயக்குனர் பலாப்பழம் என்று படத்திற்கு பெயர் வைத்து, சாதிய வகைப்பாடுகளின் வன்மம், சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் ஒழுக்கக்கேடுகள், உள்ளூர் அரசியல்வாதிகளால் காவல் துறையினர் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றனர் என்பதை சொல்லியிருக்கிறார்   எந்த இடத்திலும்  கதைறை  போரடிக்காமல் நகைச்சுவைத் ததும்ப மிக லைவாக நகர்த்தி கதை சொல்லியிருக்கும் யஷோவர்தன் மிஸ்ராவின் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்

. படத்தின் டெக்னிக்கல் டீம்  இந்தக் கதைக்கு பலம்.

 தேவையான இடத்தில் மிகச் சரியாக அதை பயன்படுத்தியிருகக்கிறார் இயக்குநர். ஹர்ஷ்விர் ஓபராயின் ஒளிப்பதிவில் உத்தரப் பிரதேச கிராமங்களின் தெருக்களும், வீடுகளும், காவல் நிலையமும் யதார்த்தத்தைப் பிரதிப்பலிக்கின்றன.

. இன்ஸ்பெக்டராக இருக்கும் ஹீரோயினுக்கும் கான்ஸ்டபிளாக இருக்கும் ஹீரோவுக்கும் காதல் இருந்தாலும், ஹீரோவின் அப்பா அந்த பெண் கீழ் சாதி என சொல்லி அவளை கல்யாணம் பண்ணா உருப்பட மாட்டாய் என திட்டும் காட்சிகளில், என்ன படிச்சி என்ன முன்னேறினாலும், இந்த கேவலமான சாதிய புத்தி ஒரு படி கூட உயரவில்லையே, பின்னர் எப்படி அது உயர்ந்த சாதியாக இருக்கும் என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

நம்ம இந்தியா முழுவதும் இன்றைய நிலை இப்படி தான்

சிறப்பு

இந்தப் படத்தின் நாயகி சான்யா மல்ஹோத்ரா, அவரது காதலரும் கான்ஸ்டபிளாக வரும் சவுரப் (அனந்த் ஜோஷி), லேடி கான்ஸ்டபிள், மற்ற போலீஸ் கேரக்டர்கள் அனைவரும் நன்றாகவே நடித்து சிரிக்க வைத்துள்ளனர்.

: மகிமாவாக நடித்துள்ள சானியா மல்கோத்ராவின் நடிப்பு தான் இந்த ஒட்டுமொத்த படத்தையே தாங்கிப் பிடிக்கிறது என்று சொல்ல வேண்டும். மேலும், பத்திரிகையாளராக வரும் நபர், அந்த உயர் அதிகாரி, உள்ளே ஆட்டம் போட்டுட்டு இருக்கிறதை அறுத்து விட்டா சரியாக இருக்கும் என உயர் அதிகாரியிடம் பேசி விட்டு உங்க பைல்ஸை சொன்னேன் சார் என ஹீரோயின் பேசும் வசனம் வேலை இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சவுக்கடி வசனமாக உள்ளது.

 காதலனாக நடித்துள்ள ஆனந்த் வி ஜோஷி பணக்காரர்கள் திருமணத்தில் ஏழைகளை அடிக்க ஹீரோயினிடம் வாங்கிக் கட்டுவது, தோட்டக்காரர் தனது மகளை காணவில்லை என்று வரும் போது அசிங்கமாக பேசி அவமதித்து அனுப்புவதற்காக கிடைக்கும் தண்டனை, பின்னர் அதிலிருந்து தெளிந்து நாயகியிடம் நல்ல பெயரை வாங்க அந்த பெண்ணை தனியாளாக தேடச் செல்வது என சிம்பிளான ஹீரோவாக ஸ்கோர் செய்கிறார்

காவல்  டீமில் உள்ள லேடி போலீஸ், காரை காணவில்லை என தேடும் போலீஸ் எனபடம் முழுவதும் செம . இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை, கிழிந்த பேன்ட் போட்டால் கேவலமானவளா என கேட்கும் வசனம், நானும் கீழ்ச்சாதி பெண் தான் அதுக்குன்னு நான் திருடியா என ஒருவரை ஹீரோயின் வெளுத்து வாங்குவது என காட்சிக்கு காட்சி படம் மிரட்டுகிறது.

 பெண்கள் காணாமல் போனால் போகட்டும் பலாப்பழம் தான் முக்கியம் என போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதும், அமைச்சரே இந்த விஷயத்தை பப்ளிக்காக பேட்டிக் கொடுப்பது, கிளைமேக்ஸில் இது ஒரு பெரிய மாஃபியா என்றெல்லாம் காட்டாமல் ஒரு லோக்கல் சின்ன பசங்க காமெடியாக செய்யும் வேலை என்று கதையை முடித்திருப்பது நம்ப முடியல.

மற்றபடி பல லாஜிக் ஓட்டைகள்  அதிகம் இருந்தாலும், போலீஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக எப்படி இருக்கின்றனர் என்பதை நகைச்சுவையாக  சொல்வதால்  படம்  நம்மை கவர்கிறது என்பதில் சந்தேகமில்லை.

. எந்தவொரு ஆபாசக் காட்சிகளோ, முத்தக் காட்சிகள் மற்றும் ஓடிடி தானே என இஷ்டத்துக்கு கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை என்பதால் நாம்  எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படமாக இந்த Kathal உள்ளது.

உமாகாந்த்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button