தனது உச்சரிப்பால் தமிழர்களின் உள்ளங்கள் கவர்ந்தவர் வி.சி. கணேசன்.

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்.
விழுப்புரம் சின்னையா மன்றாயர், ராஜாமணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர்.
இளம் வயதிலே நாடகமே இவரது உலகம். கலைஞர் அவர்களின் பராசக்தி நாடகத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு சிறப்பு பெற்றதால், மதிப்பிற்குரிய திரு பெருமாள் முதலியார் மற்றும் ஏவி மெய்யப்ப செட்டியார் இவர்களின் தயாரிப்பிலே வி. சி. கணேசன் நடித்த முதல் திரைப்படமே பராசக்தி.
தனது உச்சரிப்பால் தமிழர்களின் உள்ளங்கள் கவர்ந்தவர் வி.சி. கணேசன்.
இவர் நடிப்பை பாராட்டிய பெரியார் சிவாஜி என்னும் பட்டத்தை வழங்கினார். பின்னாளில் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார்.
ராஜா ராணி திரைப்படத்தில் ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய
” கெடுக சிந்தை கடிதிவள் துணிவே முத்தின் மகளிர் ஆதல் தகுமே என்னும் புறநானூற்றுப் பாடல்.
அன்றைய போர்க்காலம். அக்களத்தில்
தனது மகனை முதலில் அனுப்புகிறாள் தாய் , பின்னர் தனது கணவனை அனுப்புகிறார், பள்ளியில் படிக்கும் மகனையும் அந்தத் தாய் அனுப்புவதாக அமைந்த புறநானூற்று பாடல்.
இந்தப் பாடலுக்கான காட்சிக்கு டாக்டர் கலைஞர் அய்யா அவர்கள் வசனம் எழுதியுள்ளார்.
இந்தக் காட்சி கொண்ட நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் நடித்து முடித்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் ராஜசுலோசனாவுடன் நடித்துப் பேசிய காட்சி நம் கண் முன்னே.
muruga shanmugam
