கிச்சன்

மதிய உணவுக்கு ஏற்ற வாழைக்காய் வறுவல் இனி இப்படி செஞ்சி பாருங்க

மதிய உணவுக்கு ஏற்ற வாழைக்காய் வறுவல் இனி இப்படி செஞ்சி பாருங்க

வாழைக்காய் வறுவல் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அசைவ பிரியர்களுக்கும் வாழைக்காய் மீன் போன்று வறுத்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில் அவர்களும் போன்று ஒரு முறை வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய் இதன் சுவையே தனி தான்! வறுவல் செய்து எல்லா வகை சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மதிய உணவோடு இந்த வறுவலையும் செஞ்சி கொடுங்கள், விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

வாழைக்காய் வறுவல் | Valaikai Fry Recipe In Tamil வாழைக்காய் வறுவல் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அசைவ பிரியர்களுக்கும் வாழைக்காய் மீன் போன்று அசைவ கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில் இது போன்று ஒரு முறை வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. இந்த வாழைக்காய் வறுவல் செய்து எல்லா வகை சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மதிய உணவோடு இந்த வறுவலையும் செஞ்சி கொடுங்கள், விரும்பி சாப்பிடுவாங்க. Prep Time 10 mins Active Time 10 mins Total Time 21 mins Course: Breakfast, LUNCHCuisine: Indian, TAMILKeyword: valaikai fry, வாழைக்காய் வறுவல் Yield: 4 people Calories: 81kcal Equipment 1 கடாய் மிக்ஸி தேவையான பொருட்கள் ▢1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ▢3 வாழைக்காய் நறுக்கியது ▢1 டீஸ்பூன் கடுகு ▢கருவேப்பிலை சிறிதளவு ▢உப்பு தேவையான அளவு ▢மஞ்சள் தூள் சிறிதளவு ▢½ டீஸ்பூன் கரம் மசாலா அரைப்பதற்கு: ▢½ கப் தேங்காய் துருவல் ▢1½ டீஸ்பூன் மிளகாய் தூள் ▢¾ டீஸ்பூன் சோம்பு ▢½ டீஸ்பூன் சீரகம் ▢10 மிளகு ▢½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ▢2 சின்ன வெங்காயம் ▢½ பழம் தக்காளி நறுக்கியது செய்முறை ▢ முதலில் வாழைக்காயை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும் பிறகு அதனை கருக்காமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்கவும். ▢ பிறகு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் மூடி போட்டு வேகவிடவும். ▢ வேகும் சமையத்தில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ▢ அரைத்தும் அந்த மசாலாவை வேக வைத்திருக்கும் வாழைக்காவில் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும். ▢ வெந்ததும் அதன் மேல் கரம் மசாலா மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும். ▢ இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.

/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button