சினிமா

இரண்டரைமணிநேரத்தில்ராஜாபோட்டஏழுபட்டுஎல்லாமேஹிட்டு

இரண்டரை மணி நேரத்தில் ராஜா போட்ட ஏழு பட்டு எல்லாமே ஹிட்டு

திரையுலகில் பல வருடங்கள் பல ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்

 இசைஞானி இளையராஜா

பல  வருடங்கள் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர்

 இவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் ஓடியது  இவரின் இசைக்காகவே தியேட்டருக்கு போன ரசிகர்கள் உண்டு

 கதையே இல்லாத படங்களை கூட ராஜா தனது இசையால் வெற்றி பெற வைத்தார்

 அதனால்தான் அவரின் அலுவலகம் முன்பு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வரிசையில் அவருக்காக காத்திருந்தனர்

இளையராஜாவின் பல பாடல்கள் அவர் சொற்பமான நேரத்தில் இசையமைத்ததுதான்

 சில சமயம் ஒரு படத்தின் முழு பாடல்களையும் கூட சில மணி நேரங்களில் ராஜா கம்போஸ் செய்து விடுவார்

 அந்த பாடல்களும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பாடலாக இருக்கும்

ராஜ்கிரண் திரையுலகில் என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் நடிகரானவர்

 அப்படத்திற்கும் ராஜாவே இசையமைத்திருந்தார்

 அதன்பின் ராஜ்கிரண் நடித்த பல படங்களுக்கும் அவர்தான் இசை

 அப்படி ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி திரைப்படத்திற்கும் ராஜாதான் இசை

இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்

 அதிலும் ராசாவே உன்னை விடமாட்டேன்  பூங்குயிலே பூங்குயிலே கேளு  ராத்திரியில் பாடும் பாட்டு ஆகியவை மனதை மயக்கும் மெலடி பாடல்களாகும்

அதேபோல், அம்மாவை இழந்து ராஜ்கிரண் பாடும் என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாடலும் ரசிகர்களை அழ வைத்தது.

இப்படத்தில் இடம் பெற்ற ஏழு பாடல்களையும் காலை 7.30 மணிக்கு துவங்கி 9.30 மணிக்கு முடித்துவிட்டாராம் இளையராஜா

 அதாவது 2 மணி நேரத்தில் அப்படத்திற்கு தேவையான அனைத்து பாடல்களுக்கும் அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மணி நேரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது

இது போல பல சுவையான செய்திகளை காண

எங்களது சேனலை சப்ஸ்கிரைப்  செய்யுங்க@ponennamm

லைக் பண்ணுங்க

ஷேர் பண்ணுங்க

வணக்கம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button