கட்டுரை

இன்று உலக தண்ணீர் தின

இன்று உலக தண்ணீர் தினம் 💦

உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாத அடிப்படை தேவை என்றால் அது தண்ணீர் தான்.நாம் வாழும் பூமியானது சுமார் 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், வெறும் 2.5 சதவிகிதமே நிலப்பரப்பில் காணப்படுகிறது.இதிலும் முக்கால் வாசி பயன்படுத்த முடியாத அளவில் பனிப்பாறைகளாக துருவ பகுதிகளில் உள்ளன, எஞ்சியுள்ள 0.26 விழுக்காட்டை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உலக மக்கள் தொகையால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அத்துடன் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர், கடலுடன் கலக்கும் மழைநீர் என பலவழிகளில் தண்ணீர் மாசுபடுவதுடன் வீண் விரையமாகிறது.எனவே நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 22ம் திகதி உலக தண்ணீர் தினத்தை கொண்டாட ஐ.நா சபை முடிவு செய்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளிலேயே இந்த அவலநிலை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை எப்படி சமாளிக்க போகிறோம்? எதிர்கால சந்ததியினர் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி நம் முன்னே பூதாகரமாக எழுந்து நிற்கிறது. தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு நிச்சயம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button