ஆன்மீகம்

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் ஆலயம்

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் ஆலயம்

கோபுர தரிசனம் –

மூலவர்:பட்டீஸ்வரர்

அம்மன்/தாயார்:பச்சைநாயகி, மனோன்மணி

தல விருட்சம்:புளியமரம், பனைமரம்

பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்:பேரூர்

மாவட்டம்:கோயம்புத்தூர்

மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா

திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.

தல சிறப்பு

சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு “பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 1மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு பேரூர் பட்டீஸ்வரர் கோயில்,பேரூர்- 641 010.கோயம்புத்தூர் மாவட்டம்.

போன் : +91- 422-260 7991

பொது தகவல்

சிவாலயங்களில் ஆடும் நிலை யில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது. மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன. இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாககொண்டாடப்படுவதால் இத்தலம் “மேலைச்சிதம்பரம்’ என அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

முக்தி வேண்டியும், புகழ் கிடைக்கவும், நினைத்த காரியம் நடைபெறவும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கு அபிஷேம் செய்தும், வில்வ இலையால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை

சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.

முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.

இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம். கோயிலின் முன்பு “பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.

இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் “இறவாப்பனை’ எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.

நொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம்.

இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் “நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.

தல வரலாறு

பிரம்மனைப்போல படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என விரும்பிய காமதேனு, சிவனை நோக்கி கடும் தவம் இருந்தது. இத்தலத்தில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காமதேனுவின் கன்றான “பட்டி’ விளையாட்டாக தன் காலால் புற்றை உடைத்து விட்டது.பதறிப் போன காமதேனு இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. காமதேனுவின் முன் தோன்றிய இறைவன் “உனது கன்றின் குளம்படி தழும்பை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இது முக்தி தருவதில் முதன்மை தலமாதலால், நீ வேண்டும் படைப்பு வரத்தை திருக்கருகாவூரில் தருகிறேன். அங்கு சென்று தவம் செய். உனது நினைவாக இத்தலம் “காமதேனுபுரம்’ என்றும், உன் கன்றின் பெயரால் “பட்டிபுரி’ என்றும், எனக்கு “பட்டீஸ்வரர்’ என்றும் பெயர் வழங்கப்படும்,”என அருளினார்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்

சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு “பிறவாப்புளி’ என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

அமைவிடம்

கோயம்புத்தூரிலிருந்து(6 கி.மீ.) சிறுவாணி செல்லும் வழியில் பேரூர் உள்ளது. டவுன் பஸ் வசதி இருக்கிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

தங்கும் வசதி

கோயம்புத்தூர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button