தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது.

வருடம் என்னும் பெயர் வருடை என்னும் சொல்லில் இருந்து மருவி இருக்கலாம்.
சங்கப்பாடலான பரிபாடலில் பதினோராம் பாடல்.
” விரி கதிர் மதியமொ டு வியல் விசும்பு புணர்ப்ப, எரி சடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து தெரு இடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர வருடை யைப் படிமகன் வாய்ப்ப”.
இதன் பொருள் :
விரிகதிர்களையு டைய மதியத்தோடு அகன்ற வானத்துக் கண்ணே, ஒன்று படுத்திச் சேர்ப்பதன் பொருட்டாக,எரி போன்ற கடையினை யுடையவனாகிய அழகிய களிறு போன்ற சிவபெருமான் தலைமை கொள்ள, அவருக்கு கீழாக அமர்ந்திருந்து அறங்கேட்ட முனிவர்கள், விதிகளாக பகுத்தமைத்தவை மூன்றாகும்.அம் மூன்று விதிகளும் ஒவ்வொன்றிலும் ஒன்பது நட்சத்திரங்களும் இருக்கைகளைப் பொருந்தியவாக 12 ராசிகளாக விளங்கும்.
அவற்றுள் நிறம் பொருந்திய வெள்ளி என்னும் சுக்கிரன் ஏற்றின் தன்மை கொண்ட இடபராசியினை அடைந்தான். செவ்வாய் மேடத்திற்கு சேர்ந்திருந்தான்.
என குறிப்பிட்டு இருக்கும்.
நெடுநல்வாடை என்னும் சங்க நூலில்
60 – 61 ஆம் வரியில்
” திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணுர் பு திரி தரும் வீங்கு செ லல் மண்டிலத்து “
ஆகாயத்திடத்தே திண்ணிய நிலையுடைய கொம்பினை உடைய மேட ராசி முதலாக ஏனைய சென்று தெரியும். இந்த வருடை ஆடு என்பது தான் மலையாடு இதை யொட்டி ஆண்டின் காலம் வருடம் என கணக்கிட்டு அழைக்கப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது.
சித்திரைத் திங்களில் வரும் சித்திரை முழுத் திங்களில்,சித்ரா பௌர்ணமி
பூரண நிலவு சந்திரனாய் நம் வாழ்வும் குளிர்ந்து
வையகம் தழைத்து காலத்தோடு மாரி பெய்து
ஞாலத்திலே பசுமை பெற்று
உணவு உற்பத்தி தன்னிறைவுடன்
உள்ள ஆறுகளில் நீர் நிலையுடன்
நாட்டிலே வளர்ச்சியும்
நல்லதொரு ஆட்சியும்
.
நம் வாழ்வில் மகிழ்ச்சியும்
அடையும்போது அனந்தமும்
அன்பினை பகிர்ந்து தரணி மக்கள் சிறக்கவும்
இந்நாளில் சித்திரையில் தமிழாண்டு பிறக்கவும்
இயற்கை படைப்பு நன்றாக இருக்கவும்
வேண்டுகிறேன் இறைவனை
அகமகிழ்ந்து
முருக.சண்முகம் சென்னை – 56
