குருப்பெயர்ச்சி

நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படியும் வாக்கியப்பஞ்சாங்கப்படியும் வரும் ஏப்ரல் மாதம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடைபெறப் போகிறது யாருக்கெல்லாம் குரு பலன் கிடைக்கப்போகிறது என பார்க்கலாம்.
‘குருபார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும். இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும் என்பதால் அதிகம் அச்சப்படத் தேவையில்லை.
குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பகவான் கோட்ச்சாரத்தில் சுற்றிவரும் போது ராசியை 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்கின்றனர். குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருபெயர்ச்சி 2023 திருக்கணித முறைப்படி ஏப்ரல் மாதம் 22ம் தேதி
சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் ரேவதி 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வின் 1ம் பாதம் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் பலருக்கும் நன்மைகள் கிடைக்கப்போகிறது. கால புருஷ தத்துவப்படி முதல் வீடான மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரு பகவானுக்கு சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. ஓராண்டு காலம் குரு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்வார் 2024 மே 1ம் தேதிவரை மேஷத்தில் அமர்ந்து பலன்களை வழங்கி வருவார்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரகங்கள். குரு இரண்டு வகைப்படும். அவை தேவ குரு மற்றும் அசுர குரு. தேவ குரு தான் நமது குரு பகவான் ஆவார். அசுர குரு ‘சுக்கிரன்’ ஆவார். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பில் குரு திசை நடக்கும்.
உலோகம் :தங்கம்
ரத்தினம் : புஷ்பராகம்
உடை :பொன்நிற ஆடை
தூப தீபம் ஆம்பல்
வாகனம்: யானை
வகுப்பு :அந்தணர்
குரு திசை சரியாக 16 வருடங்கள் கொண்டது.
குருபெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலன்கள் பெறப்போகும் ராசிகள்
மீனம்,
தனுசு,
துலாம்,
சிம்மம்,
மிதுனம்,
மத்திம பலன்களை பெறப்போகும் ராசிகள் :
மேஷம்,
கடகம்,
விருச்சிகம்,
மகரம்,
கும்பம்,
கவனமாக இருக்க வேண்டிய
ராசிகள் :
ரிஷபம்,
கன்னி,