இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா

இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா இதே மார்ச் 14இல்தான் ரிலீ8ஸாச்சு
ஆலம் ஆரா ((உலகத்தின் ஆபரணம் என்று அர்த்தம்) மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 1931 ம் வருஷம் திரை இடப்பட்டது.
இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம்.
ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.
2 மணி நேரமும் 4 நிமிடங்களும் ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி ராஜ் கபூர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர் முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது.
ஒலிப்பதிவில் இரைச்சலை தவிர்ப்பதற்காக இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது, மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் தெரியாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.
ஆனால் இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது.
சில வருடங்களுக்கு முன் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது.
ஆனாலும்,இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல் பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
ஹூம்.. நம் டிஜிட்டல் இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன் இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…!