கட்டுரை

மம்முகோயா

!🔥

தமிழில் அரங்கேற்றவேளை, காசு, கோப்ரா ஆகிய படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் மம்முகோயா. மலையாளத்தில் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவங்கிய மம்முகோயா 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிளமென்ஸ் ஆஃப் பாரடைஸ் என்ற பிரெஞ்சு படத்திலும் மம்முகோயா நடிச்சிருகார். கோழிக்கோடு வட்டார மொழியில் பேசி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். காமெடி வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியை துவக்கி வைக்க வந்தார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க மக்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76. இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From The Desk of கட்டிங் கண்ணையா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button