ஆஸ்தானக் கவிஞர் என்ற பதவி உங்களுக்குக் கொடுக்கப்பட்டது பற்றிகவியரசு கண்ணதாசன்

ஆஸ்தானக் கவிஞர் என்ற பதவி உங்களுக்குக் கொடுக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவியரசு கண்ணதாசன் பதில் : எம்.ஜி.ஆர் தமிழரல்ல என்ற குற்றச்சாட்டை அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மறுக்கின்றன. சொல்லப்போனால் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வோர் செய்யாத பல காரியங்களை அவர் செய்து வருகிறார்.
தான் இருக்கும் பதவியில் தன் குடும்பம் எந்தவிதப் பங்கும் பெறாதவாறும், தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றவர்கள் எல்லாத்துறையிலும் அதிக இடம்பெறும் வகையிலும் அவர் நடந்து கொள்கிறார்.
உதாரணத்திற்கு முந்திய ஆட்சியிலும், அதிகார (ஜனாதிபதி) ஆட்சியிலும் கூடப் பதவி வகித்த மலையாளிகளை ஒதுக்கிவிட்டு, அந்த இடங்களுக்குத் தமிழர்களையே போடுவது என்ற கொள்கை வகுத்திருப்பதை இதில் குறிப்பிடலாம்.
அந்த சுபாவத்தினுடைய ஒரு பிரதிபலிப்பாகத் தான் அவரை அதிகம் விமர்சித்த எனக்கும் ஒரு பதவியைக் கொடுத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.
இந்தப் பதவி எவ்வளவு பெரியது, சிறியது என்ற விஷயத்தை விட, எவ்வளவு விஷயங்களை மறந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே முக்கியமாகும்.
நான் அவரைத் (எம்.ஜி.ஆரை) துன்புறுத்திய அளவுக்கு அவர் என்னைத் துன்புறுத்தியது கிடையாது.
காரணங்களைப் பரிசீலிக்காமல் விட்டுவிட்டு ஒரு எதிரி என்றே என்னை வைத்துக் கொண்டே பார்த்தாலும், ஊர் மரியாதையைப் பெரிதாகக் கருதி அவர் இதைச் செய்திருக்கிறார் என்றே கருத வேண்டும்.
ஆங்கிலத்தில் ‘மெக்னானிமிட்டி’ , ‘எந்தஃராஸ்மன்ட்’ என்று இரண்டு வார்த்தைகள் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் என்பது அதைத் தான் குறிக்கிறது என்று நான் கருதுகிறேன்.