கவிஞர் ஜான் கீட்ஸ் நினைவு நாள்…

கவிஞர் ஜான் கீட்ஸ் நினைவு நாள்….
ஜான் கீட்ஸ் 1795ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் பிறந்தார்.ஜான் கீட்ஸ் ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீட்ஸ் ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார்.
காசநோயால் இளவயதில் கீட்ஸ் இறந்து போய்விட்டார் . அப்போது அவரது வயது இருபத்தைந்து . ஆறு வருசங்களே அவர் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் பெரும்பான்மையானவை காதல் கவிதைகள். அவரே ஒரு கவிதைக் காதலன். அவரது கவிதைகளை வாசித்த பெண்கள் அவனையே காதலனாக மனதில் வரித்து கொண்டு மகிழ்ந்தார்கள்.
Beauty is truth, truth beauty – that is all / you know on earth, and all ye need to know என்ற அவரது கவிதை வரிகள் ரொமான்டிக் கவிதையின் உச்சமென கொண்டாடப்பட்டன .. சிம்பிளாக சொல்வதானால் கீட்ஸைக் காதலிக்காத பெண்களே இங்கிலாந்தில் இல்லை எனுமளவு புகழ்பெற்றிருந்தான் ..
கீட்ஸ் எழுதிய முதல் புத்தகம் பெரிதாக கவனம் பெறவில்லை. இதனால் சோர்வு அடைந்தவர், நண்பர்களிடம் வலியச் சென்று கவிதையைக் காட்டி அபிப்பிராயம் கேட்டுள்ளார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலர் கடுமையாக விமர்சித்தனர். இதனால் அவமானம் அடைந்தார். ஆனால், இதுதான் புதிய பாணியைப் பின்பற்றுமாறு அவரைத் தூண்டியது. இவரது அடுத்த கவிதைத் தொகுப்பான ‘எண்டிமியான்’ புகழ்பெற்றதோடு இவரை முக்கிய இளம் கவிஞராக அடையாளம் காட்டியது.
இவரது ‘டு ஆட்டம்’ கவிதை உலகப் புகழ் பெற்றது. ‘இசபெல்லா’, ‘தி ஈவ் ஆஃப் செயின்ட் ஆக்னஸ்’, ‘ஓட் டு எ நைட்டிங்கேல்’, ‘ஹைப்பரியான்’, ‘லாமியா’ உள்ளிட்ட கவிதைகள் பிரபலமானவை.
ஆனாலும் இவருடைய ஆக்கங்களில் மில்டன், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் வாழ்ந்த போது அவருடைய படைப்புகள் பெரும்வரவேற்பை பெறாது போனாலும் அவர் இறந்த பிறகு, அவைபெரிதும் போற்றப்பட்டன.