சினிமா
நடிகர் விஜய் இன்ஸ்டா பக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்-அஜித் இருவர்களின் ரசிகர்கள் எப்போதும் டுவிட்டரில் சண்டை போடுவார்கள், ஆனால் இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இல்லை.
விஜய் டுவிட்டரில் இருந்தாலும் தனது பட போஸ்டர்களை மட்டுமே பதிவு செய்வார், மற்றபடி எதுவும் பதிவு செய்ய மாட்டார். அஜித் சுத்தமாக சமூக வலைதளங்களில் இல்லை.
நேத்திக்கு (ஏப்ரல் 2) யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடிகர் விஜய் இன்ஸ்டா பக்கம் திறந்தார். அவர் வந்த சில மணி நேரங்களிலேயே பாலோவர்ஸ் குவிந்தார்கள்.
இன்னிக்கு மார்னிங் நிலவரம் வரை 4 மில்லியன் பாலோவர்கள் விஜய்யின் இன்ஸ்டா பக்கத்தில் உள்ளனர். இன்ஸ்டா பக்கம் திறந்த சில நொடிகளிலேயே அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் விஜய் டாப் 5 லிஸ்டில் வந்துள்ளார்.
அதோடு அவரை இன்ஸ்டாவில் முதலில் பாலோ செய்த பிரபலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என கூறப்படுது.