இந்தி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

இந்தி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா
இசையை மையப்படுத்தி பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா நடிக்கும் இந்திப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
தற்போது, தமிழில் ‘விடுதலை’, ‘கஸ்டடி’, ‘நினைவெல்லாம் நீயடா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்தியில் பல படங்களுக்கு இளையராஜா ஏற்கெனவே இசையமைத்துள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் 2009 நவ.14-ம் தேதி வெளியான ‘பா’ படத்திற்கு இளையராஜா கடைசியாக இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார். ‘மியூசிக் ஸ்கூல்’ என்ற அப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா உள்பட பலர் நடித்துள்ளனர். பப்பா ராவ் இயக்கியுள்ள இப்படத்தில் ஏராளமான குழந்தைகள் நடித்துள்ளனர். குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதும், இதன் பின் இசைப்பள்ளியின் சேர்ந்த பிறகு அவர்களது மனநிலை எப்படி மாறுகிறது என்ற கதைக்களத்தில் ‘மியூசிக் ஸ்கூல்’ படம் தயாராகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு மே 12- ம் தேதி ரிலீஸாகிறது.