நடிகர் S.A. அசோகன்

நடிகர் S.A. அசோகன்
இவர் தமிழ் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு.
குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி, கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் மொட்டைத் தலையுடன், ஒற்றைக் கண்ணுக்கு மட்டும் திரை போட்ட வில்லனாக வருவார். இதில் இவரது நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.
கந்தன் கருணை படத்தில் சூர பத்மனாக வரும்போது அவருடைய தோற்றம், நடை, உடை, தொனி எல்லாம் நேரடியாகவே ஒரு சூர பத்மனைப் பார்ப்பது போலிருக்கும்.
கால்களில் ஆறுவிரல்கள் உள்ள, வில்லியுடன் சேர்ந்து கொண்டு அடிமைப் பெண் படத்தில் செய்யும் செங்கோடன் என்ற வில்லன் வேடத்தை இனி யாராலும் செய்ய முடியாது.இந்த படத்தில் சத்தமிட்டு, தனது சபதத்தை நினைவுபடுத்தி, சூட்டுக் கோலால் தனக்குத் தானே சூடு போட்டுக் கொள்ளும் காட்சியை மறக்க முடியுமா என்ன?
ரிக்ஷாக்காரன் என்ற படத் தில் தனது மாமா (மேஜர் சுந்தரராஜன்) பெரிய நீதிபதி என்ற தைரியத்தில் , நீதியையே வளைக்கும் பெரிய மனிதனாக ஆட்டம் போடும் நடிகர் அசோகனை இந்த படத்தில் காணலாம்.
அந்த படத்தில் வரும் ஒரு பாடல் “ அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், “ என்று தொடங்கும்பாடல் பிரபலமானது.
பாதகாணிக்கை. இதில் மாமனார் (எம்.ஆர்.ராதா) பேச்சைக் கேட்டுக் கொண்டு, சொத்துக்காக, தனது அப்பாவை (எஸ்.வி.சுப்பையா) கோர்ட்டுக்காக இழுக்கும் மகன் வேடத்தில் அசோகன் நடித்து இருந்தார். குடும்பக் கதை. இதில் அசோகன் தனது முழுத் திறமையையும் காட்டி நடித்து இருந்தார். இதில்
“ ஆடிய ஆட்டம் என்ன?” என்று தொடங்கும்,பாடல்
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு, ஒரு காலை இழந்த மகனாக, ஊன்றுகோலுடன் அசோகன் பாடும்போது என்னையும் அறியாமல் கண்ணீரி வந்து விட்டது. சோகக் காட்சி பார்ப்பவர் கண்களை குளமாக்கும்.
இரவும் பகலும். டைரக்ஷன் ஜோசப் தளியத் (JOSEPH THALIYATH) அந்த படத்தில் வரும்,
“அப்படி இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான்” – என்ற பாடல் அசோகன் தனது சொந்தக் குரலில் பாடியது. கையில் கோலூன்றிய முதியவராக வரும் நடிகர் அசோகனின் நடிப்பும், பாடலின் கருத்தும் (பாடல்: ஆலங்குடி சோமு)
வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தில் நடிகை மணிமாலா இவருக்கு ஜோடி. அந்த படத்தில்
“ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்” என்ற பாடலுக்கு மிகவும் அமைதியாக நடித்து இருப்பார். அதே படத்தில் நடிகர் மனோகருடன் சேர்ந்து
பைத்தியமே கொஞ்சம் நில்லு” என்ற பாட்டிற்கு இருவருமே செய்யும் சேஷ்டைகள் நகைச்சுவையாக இருக்கும்.
ஒரு பணக்கார குடும்பத்தில், நெஞ்சுவலி கொண்ட அண்ணன் பாத்திர படைப்பில்
அதே கண்கள் படத்தில் அமைதியாக நடித்து இருப்பார்.
உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக அசோகன் நடித்துள்ளார்
-வள்ளியம்மை வள்ளி