சினிமா

விவேக்கை உயிரோடு கொண்டுவரப்போறாங்க- இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கவுள்ள புதிய தொழில்நுட்பம்!

விவேக்கை உயிரோடு கொண்டுவரப்போறாங்க- இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கவுள்ள புதிய தொழில்நுட்பம்!

ஷங்கரின் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த சமயத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டு மூன்று பணியாள்ர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிப்போனது. இதனிடையே கொரோனா அலை வேறு வீசியதால் இத்திரைப்படம் டிராப் என்றே முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. எனினும் இந்த இடைப்பட்ட கொரோனா காலகட்டத்தில் இத்திரைப்படத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். குறிப்பாக விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் விவேக் மற்றும் நெடுமுடி வேணு இடம்பெற்ற காட்சிகள் இடம்பெறுமா? போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது “இந்தியன் 2” குறித்து ஒரு விசித்திர தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது “இந்தியன் 2” திரைப்படத்தில் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்த காட்சிகள் நிச்சயமாக இடம்பெறுமாம். அதே போல் அவர்கள் இருவரும் நடிக்க இருந்த மிச்ச காட்சிகளில் வேறு நடிகர்களை நடிக்க வைத்து ஒரு உலகளாவிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நடிகர்களின் உருவத்தை விவேக் உருவமாகவும் நெடுமுடி வேணு உருவமாகவும் மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காகவே ஒரு பிரத்யேக தொழில்நுட்ப குழுவை தயார் செய்து வருகிறாராம் ஷங்கர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button