2 நிமிடத்துக்கு ஒரு தடவை மெட்ரோ ரயில், 138 ஓட்டுநர் இல்லா Train.

2 நிமிடத்துக்கு ஒரு தடவை மெட்ரோ ரயில், 138 ஓட்டுநர் இல்லா Train
.
சென்னை, மெட்ரோ ரயில் கட்டம் 2ல் இரண்டு நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் அறிவிப்பு:
சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இந்த ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.5 லட்சம் ஆக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, பெட்டிகளை கூடுதலாக இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் கட்டம் 1ல் 2.5 நிமிட இடைவெளியில் ரயிலை இயக்க திட்டமிட்டு இருந்தாலும், சில காரணங்களால் 4 முதல் 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, பெரும்பாலான பயணிகளின் கோரிக்கையை மெட்ரோ ரயில் கட்டம் 2ல் 119.9 கி. மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது
இத்திட்டத்தின் மூலம் 2 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்கவும், 138 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை தற்போது பயணிகள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
