மாற்றம் ஒன்றே மாறாதது

தமிழில் இருப்பதால் மட்டுமே புறம் தள்ளப்பட்ட…
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை.
இந்த உண்மை புரிந்தும் மனதை மாற்றிக்கொள்ள தாயாராக இருப்பது இல்லை என்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.
மனசிக்கல் மிகவும் வலியது… நரகமானது
“மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை” என்று அதனால் தான் கூறினார்கள்.
“உடல் நோய் மனதிலும்
மன நோய் உடலிலும்”
துவங்குகிறது என்று Acupuncture தத்துவம் சொல்லுகிறது…
அதையே…
“பித்தம் கலங்கினால்
சித்தம் கலங்கும்” என்று சித்த வைத்தியம் கூறுகிறது…
இது எல்லாம் விடுத்து இன்று depression – க்கு அறுவை சிகிச்சை என்று கிளம்பி உள்ளார்கள் கார்பொரேட் ஆள் விழுங்கி முதலைகள் !

மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை என்னும் இடத்தில். மருந்து தேவை இல்லை என்று மீண்டும் மீண்டும் கிளாசிகல் அக்குபஞ்சர் மருத்துவம் கூறுகிறது.
இதையே
மனம் எப்பொழுது செம்மை ஆகும்? உடல் சீரடையும் போது.
விஷக் கழிவு
மருத்துவக் கழிவு
கெமிகல் கழிவு
என்று அனைத்தையும் உடல் தாங்கி நிற்க … சித்தம் கலங்கி depression வரத்தானே செய்யும் ? இந்த கழிவுகள் மொத்தமும் உடல் விட்டு அகல தன்னால்
மன அழுத்தம்
அதீத கோபம்
அதீத சோகம்
அதீத பயம்
குழப்பம்
முடிவெடுக்க முடியாமை
ஆகியவை நீங்கும்
தமிழில் இருப்பதால் மட்டுமே புறம் தள்ளப்பட்ட நம் மரபுவழி மருத்துவம்…. !
உதிரும் மனித உயிர் !
இதெல்லாம் புரியாம… அட போங்க பாஸ் நீங்களும் உங்க…
எண்ணமும் எழுத்தும்
Devi P Kannan
