கட்டுரை
உலக கவிதை தினம்

உலக கவிதை தினம்
இந்த மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவிச்சிருக்குது.
1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன.
இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச கவிதை இயக்கங்களுக்கு புதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் கொடுக்கவேண்டும் . மற்றும் கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே ‘உலக கவிதை தினம்’