அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே…

1964 ஆம் ஆண்டு நிலவரப்படி, எனது அப்பா கண்ணதாசனின் ஒரு நாள் ஊதியம் ரூ 10 ஆயிரம் ஆகும். அவர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கு ஒரு ஃபுல் பாட்டில் வாங்கினால் அதில் அவர் பாதியைத்தான் குடிப்பார். மீதி பாதியை அவருடைய உதவியாளரிடம் கொடுத்துவிடுவார். அப்போது அந்த பாட்டிலின் விலை வெறும் ரூ 60 ஆகும். அதாவது அவருடைய ஊதியத்தில் 0.1 சதவீதத்தை மட்டுமே குடிப்பதற்கு பயன்படுத்துவார்.
இதனால் குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழவில்லை. அப்பாவை பார்த்து எனக்கு குடிப்பழக்கமே இல்லை. அப்பா குடித்தால் எங்களிடம் பேசவே மாட்டார். என்னிடம் சிலர் சொல்வார்கள், அப்பா குடித்துவிட்டால் அப்படியே கவிதையை கொட்டுவார்னு. அப்படி சொல்றவங்களை அறையலாம்னு தோன்றும். காரணம் அப்பா குடித்துவிட்டால் வெளியே போக மாட்டார், குடிப்பதிலும் கூட்டு சேர்க்க மாட்டார்.
அப்பாவின் கஷ்டங்கள் எல்லாம் அவரின் உடன்பிறந்தவர்களால் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவரை உபயோகப்படுத்திக் கொண்டு கஷ்டத்தில் விட்டுவிட்டார்கள். தனது அண்ணனிடம் பணம் இருப்பதை கண்ட அப்பா, நேரில் போய் பணம் கேட்டார். ஆனால் பெரியப்பாவோ பணம் இல்லை என கூறிவிட்டார். இதனால் மிகவும் மனம் நொந்தார் அப்பா.
அப்போது எழுதியதுதான் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே… என்ற பாடலை எழுதினார். ஆனால் இயக்குநர் பீம்சிங்கோ அப்போதைய முதல்வர் அண்ணாதுரையை குறிப்பது போல் உள்ளதால் அதை மாற்றுமாறு கூறினார். எங்கள் வீட்டில் எப்போதுமே 10 கார்கள் நிற்கும். எந்த கம்பெனி கார் வாசலை சரியாக மறித்து நிற்கிறதோ திரும்பியே பார்க்காமல் அந்த காரில் ஏறி அப்பா சென்றுவிடுவார்.
அது போல் அவர் இறப்பதற்கு முன்னர் வீட்டை வழிமறித்து சென்ற காரில் அவர் ஏறும் போது வீட்டை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றார். 1954 ஆம் ஆண்டு அந்த வீட்டிற்கு நாங்கள் குடி வந்தோம். 1981 இல் அப்பா இறந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஒரு முறை கூட வீட்டை அப்படி பார்த்ததில்லை. ரங்கராஜபுரத்தில் அப்பா 6 கிரவுண்ட் நிலம் ஒன்றை வாங்கியிருந்தார். எம்.ஆர்.ராதாவிடம் அவசர செலவுக்கு அப்பா கடன் வாங்கியிருந்தார்.
இப்படியே அடிக்கடி வாங்கி வந்ததால் எம்.ஆர்.ராதாவின் கணக்காளர் அப்பாவிடம் கடன் தொகை ரூ 9 ஆயிரத்தை தாண்டியதாக சொன்னார், அப்பாவும் இரண்டு வாரத்தில் திருப்பி தருவதாக சொன்னார். ஆனால் ரூ 9 ஆயிரத்திற்கு பதில் மேற்கொண்டு பணம் தருவதாகவும் அதற்கு பதிலாக ரங்கராஜபுரம் கிரவுண்டை எழுதி தருமாறு எம்.ஆர். ராதா கேட்டார். எனவே அப்பா எப்போதுமே நிலத்தை விற்பதை பற்றி கவலை கொள்ளவே மாட்டார. இவ்வாறு அண்ணாதுரை கண்ணதாசன் தெரிவித்தார்.
நன்றி: ஒன்இந்தியா தமிழ்
See translation
