ரொமன்ஜம் (Romancham)’ மலையாள திரைப்படம் பற்றி எனது கருத்துகள்

நான் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி திரையில் பார்த்த `ரொமன்ஜம் (Romancham)’ மலையாள திரைப்படம் பற்றி எனது கருத்துகள்
முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை சிரிப்பலைகளை உண்டாக்கிய இந்தப்படம் . வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையில் 50 கோடி வசூலித்து, இந்த வருடத்தின் முதல் ப்ளாக்பஸ்டரை கேரள சினிமாவில் பதிவு செய்து இருக்கிறது.என சொல்கிறார்கள்
கதையைப் பொறுத்தவரை வெகுநாட்களாக மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த ஜிபி (‘கும்பலங்கி நைட்ஸ்’ புகழ் ஷோபின் ஷாஹிர் )என்ற வாலிபன் இயல்பு நிலைக்குத் திரும்புகிறான். அவன் தன் பேச்சுலர் வாழ்க்கையில் நண்பர்களோடு விளையாட்டாக எடுக்கும் ஒரு முடிவு எப்படி அவர்கள் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது என்பதே இந்த ‘Romancham’
இந்தப்படத்தில் வருகின்ற 7 கதாபாத்திரங்களில் அவரைத்தவிர மற்றவர்களும் தங்கள் இயல்பான குறும்புத்தனமான நடிப்பின் மூலமாக மற்றவர்களும் ஏதோ ஒரு பேச்சுலர் ரூமில் கேமராவை வைத்து நிஜமாக ஷூட் செய்தது போன்ற யதார்த்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நாம் பார்ப்போமே பேச்சலர்கள் வீடு போல குப்பைக்குள் வீடா, வீட்டிற்குள் குப்பையா என்னும் நிலையில் இருக்கும் வீட்டிற்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிகரெட் பாக்கெட்கள், மதுபான பாட்டில்கள், சுவரெங்கும் கிறுக்கல்கள், போஸ்டர்கள், பொறுப்பற்ற பலரில் பொறுப்பான ஒரு ரூம் மெட்,
கதைக்களமான பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் ஜிபின் (ஷோபின் ஷாகிர்), ரிவின், நிரூப், ஷிஜப்பன், முகேஷ், ஹரிகுட்டன், சோமன் உள்ளிட்ட இவர்கள் தான் அந்த 7 நண்பர்கள்
. இவர்களில் இருவர் வேலையில் இருப்பவர்கள், இருவர் எந்த வேலையுமே இல்லாதவர்கள், ஒருவர் தோல்வியடைந்த பிசினஸ்மேன், இருவர் இன்டர்வியூ முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள்
வீட்டிற்குள்ளேயே விளையாட்டு, ஒரே வண்டியில் நால்வர் பயணம், கலாய், ரகளை, சேட்டைகள் எனக் கலகலப்பான பேச்சுலர் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கின்றன முதல் 30 நிமிடங்கள்.இதில் ஒருவன் அடிக்கடி டாய்லவாசி
எலித் தொல்லை .அவைகளை சாகடித்து புதைத்து சிலுவை வைப்பது
இப்படிச் சென்று கொண்டிருக்கும் கதையில் திருப்பமாக ஷோபின் ‘Ouija Board’ ஐ கொண்டு வர
கதை களை கட்ட ஆரம்பிக்கிறது
இவர்கள் விளையாட்டாகத் தானே கையை அசைத்து ‘அனாமிகா’ என்னும் பெயரை போர்ட்டில் வரவைக்கிறார்கள்
. அப்படி உருவாகிய அனாமிகா உண்மையில் நிஜமானால் என்ன நடக்கும் என்பதே படத்தின் மீதிக்கதை
இறந்தவர்களுடன் பேச முயற்சிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்தான் நமக்கு திரிலிங்
இந்த விளையாட்டு நண்பர்களின் நண்பர்களுக்கும் வேகமாகப் பரவுகிறது. அவர்களும் இந்த ஓஜா பலகையை நம்பத் தொடங்குகின்றனர். இன்னும் சிலர் காணாமல் போன பொருட்களை யார் எடுத்தது?என்பது போன்ற சந்தேகங்களை எல்லாம் கேட்டு பதில் தெரிந்து கொள்கின்றனர்.
ஓஜா பலகையால் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கையில் சில அசாதாரணமான சம்பவங்கள் துரத்த தொடங்குகின்றன.
அது என்ன மாதிரியான பிரச்சினைகள்? அதிலிருந்து 7 நண்பர்களும் மீண்டனரா? இல்லையா? என்பதை நான் இங்கே சொலலிட்டா படம் பார்க்கும் இன்ட்ரஸ்ட உங்களுக்கு போய்விடும் என்பதால் சொல்லலை
இயக்கும் ஜித்து மாதவன் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்
ரோமாஞ்சம் என்பதற்கு சிலிர்த்தல் அல்லது கூச்செறிதல் என்று சொல்வாங்க
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே, இந்த திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு அந்த உணர்வை தவறாமல் கொடுத்திருக்கிறார்
குறைந்த செலவில் எடுத்து மிகப் பெரிய வசூலை ஈட்ட வைத்துள்ளார்
. இதற்கு காரணம், இயக்குநர் கையாண்டுள்ள ஹாரர் கலந்த டார்க் காமெடிதான்.
படம் முழுக்கவே திகில் கலந்த நகைச்சுவை
படம் பார்ப்பவர்களை கட்டிப்போட்டு பயணிக்க வைக்கிறது
ஹாரர் திரைப்படம் என்பதற்காக பார்வையாளர்களுக்கு பயம் காட்ட வேண்டுமென எந்தவொரு டெம்ப்ளேட் யுக்திகளும் இல்லை
ஆனாலும் நம்மை அவர் பயத்தை உணர வைத்து பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்
. நண்பர்கள் நிறைந்த வீட்டில் அளவற்றுக் கிடப்பதில் நகைச்சுவை பிளஸ் பாயிண்ட்
படம் முழுக்கவே அது இருக்கு
இதற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும்
அதேநேரம் அவ்வப்போது வரும் சஸ்பென்ஸ் காட்சிகளில் மிரண்டுபோகவும் செய்திருக்கிறார்.
..
நண்பர்கள் வாழும் வீடுகளில் எழும் சிறுசிறு பிரச்சினைகளுக்கான மிக முக்கிய காரணங்களாக இருக்கும்.

சமையல் நடைபெறாத வீடுகள் என்றால் பிரச்சினை வராது. சமைக்கின்ற வீடுகளாக இருந்தால், பாத்திரங்களை சுத்தம் செய்தல், சமைத்தல், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவது, வீட்டை சுத்தம் செய்தல், கழிவறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகள் பங்கிட்டுக் கொள்ளப்படும்
. இதில் யாராவது வேலை செய்யலனா பிரச்சினைகள் வரும். அந்த சண்டை ,நக்கல் மற்றும் அந்த நையாண்டிகள் இந்த படத்தின் உயிரோட்டம்
ஷானு தாஹிரின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ்
ரொமன்ஜம்’ எனும் மலையாள வார்த்தையின் அர்த்தம் ‘புல்லரிப்பு’ (Goosebumps). தலைப்பைப் போலவே காட்சிக்குக் காட்சி தனது பின்னணி இசையின் மூலமாகப் புல்லரிக்கச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம்
குறிப்பாக போர்ட்டில் 4+3 எவ்வளவு என்று அசால்ட்டாக விளையாடிக் கொண்டிருந்த பேய் விளையாட்டில், இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைக் கேட்க, அதைச் சரியாகச் சொல்லி, விளையாட்டு தீவிரமாக உருமாற்றம் அடையும் காட்சியில் பின்னணி இசை
செம
. சிரித்துச் சிரித்து நாம் அந்த மிரட்சியில் நிசப்தம் ஆகிறோம்
. ஒரு வீடு, 7 நண்பர்கள், இரவு காட்சிகள், கேரம் போர்டு, மெழுகு திரி, தெரு விளக்கு என ஒரு வீட்டிலிருக்கும் பொருட்களுக்கும் மனிதர்களுக்குமான நெருக்கத்தை படத்தின் ஒளிப்பதிவும், இசையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கின்றன
அதுவும் ஷோபின் ஷாகிரின் நண்பராக வரும் ஷிபுவின் (அர்ஜுன் அசோகன்) செம
இரண்டாம் பாதியில் அவரின் கதாபாத்திரம் அதகளம் செய்கிறது. இவர் தலையை ஒருவாறு ஆட்டி ஆட்டி சிரிக்கும் மேனரிசம் அட்டகாசம்
அவர் வரும் காட்சியிலிருந்து , அவர் மீண்டும் ஊருக்கேத் திரும்பிச் செல்லும் காட்சி வரை படம் பார்க்கும் பார்வையாளர்களை திக்குமுக்காடிப் போகச் செய்து நம் மனதை அள்ளுகிறார்
குறிப்பாக இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுக்கும் காட்சி நிச்சயம் சிரிப்பலை
. ஷோபின் ஷாகிர், அர்ஜுன் அசோகன் உட்பட மிக சொற்பமான பிரபல நட்சத்திரங்களுடன், கேரள மக்களுக்கு சமூக ஊடகங்களின் வழியே நன்கு பரிச்சையமான பலரை அறிமுகப்படுத்தி தனது கதையை யதார்த்தமானதாக மாற்றியிருக்கிறார் படத்தின் இயக்குனர்
.
. இயக்குநர்கள் பலர், பிரமாண்ட பட்ஜெட், பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு VFX-ல் நல்ல தரத்தைக் கொடுக்கத் தவறிவிடும் போது, வெறும் ரூ.2 கோடிக்கும் கீழான பட்ஜெட்டில் VFX-ஐ மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ஆங்காங்கே எலிகள் வருகின்ற காட்சிகள் மிகத் தத்ரூபம்
.

. நகைச்சுவை பேய்ப்படம் என்றாலும் எவ்வித செயற்கைத்தனத்தையும் வலிந்து திணிக்காமல், லாஜிக்கோடு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஜித்து.
கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், ஏப்ரல் 7ம் தேதி முதல் டிஸ்னிப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மொழி தெரியாதவர்களைக் கூட படம் முடிந்த பின்னர் “ஆத்மாவே போ.. போ” என்று முணுமுணுக்க வைக்கும்
இவ்வளவு நிறைகள் இருந்தாலும் படத்தின் க்ளைமாக்ஸ் பல கேள்விகளோடு முடிகிறது
. அடுத்த பாகத்துக்கான லீடு, வெறும் டிரெண்டு, சம்பிரதாயமாக இல்லாமல், கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லும் என நம்புவோம்
ஆனாலும், படம் முடிந்து வெளியேறிய பின்னரும், படத்தின் காட்சிகளை நினைத்துப் புன்னகைக்கும் விதத்தில், மலையாள சினிமாக்கள் இன்னோரு அற்புத படைப்புதான் இது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த ப்படத்தை ப்பார்த்த பின் நம்ம தமிழ்பபடங்கள் இன்னும் 50 வருசங்கள் ஆனாலும் அவைகளை மிஞ்ச சாத்தியமில்லை என்ற எண்ணம்தான் வரும்
,….உமாகாந்த்
.