கே. பாலாஜி, -தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்

F!
கே. பாலாஜி, -தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இறந்த தினமின்று.
கே. பாலாஜி கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். கொஞ்சம் டீடெய்ல்ஸ் ப்ளீஸ் என்று கட்டிங் கண்ணையா-வுக்கு மெசெஜ் அனுப்பிய பத்தாவது நிமிடத்தில் வந்த ரிப்போர்ட் இது:
சென்னையில், நரசுஸ் ஸ்டுடியோவில், புரொடக் ஷன் மேனஜராக பணிபுரிந்தவர். அவ்வையார் படம் மூலம், நடிகரானார். தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில், துணை நடிகராக நடித்து, பிரபலமானார். 966-ல், ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ என்ற பட நிறுவனத்தைத் துவக்கி, படத் தயாரிப்பில் இறங்கினார். ‘ரீமேக்’ படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். பில்லா, தீ, வாழ்வே மாயம், கிரீடம் உட்பட, 54 படங்களை தயாரித்துள்ளார்.இவரது தயாரிப்பில், சிவாஜி கணேசன், 17 படங்களில் நடித்துள்ளார். இவரது தயாரிப்பில் வெளிவந்தவற்றில், 90 சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன
கோலிவுட்டில். ஒரு தயாரிப்பாளராக கே.பாலாஜி சாதனை புரிந்திருக்கிறார். பாலாஜி-சிவாஜி காம்பினேஷன் ரீமேக் படங்களாக எடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். அவர் எடுத்த படங்கள் ஒரு பத்து பதினைந்து வருஷங்கள் தோல்வியே அடைந்ததில்லை. ரீமேக்தான் செய்வார். வெற்றி பெற்ற படங்களாக பார்த்து தமிழுக்கு கொண்டு வருவார். பெரும்பாலும் சிவாஜி ஹீரோ. எம்எஸ்வி இசை. சிவாஜியை வைத்து அவர் எடுத்த மொக்கைப் படங்களான நீதிபதி, தீர்ப்பு எல்லாம் கூட செமை ஓட்டம் ஓடியது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் தயாரித்தவர் இவர்தானாம் – 17 படங்கள்.
நீதி, எங்கிருந்தோ வந்தாள், திருடன், தியாகம், தீபம் என்று சிவாஜி கூடவும், தீ, பில்லா, விடுதலை என்று ரஜினி கூடவும், சவால், சட்டம் என்று கமல் கூடவும் வெற்றி மேல் வெற்றி. பில்லா ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்.
அவர் எடுத்த முதல் படத்தில் ஜெமினி ஹீரோவாம் – அண்ணாவின் ஆசை என்று பேராம்.
ஒரு பேட்டியில் அவர் ஒரு முறை தன ரீமேக் ரகசியத்தைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு முறையும் பம்பாய் போய் இறங்கும்போது டாக்சி டிரைவரிடம் பேச்சு கொடுப்பாராம். என்ன படம் நன்றாக இருக்கிறது, என் இப்படி சொல்கிறீர்கள் என்று அவரிடம் ஒரு பேட்டி எடுப்பாராம். அதை வைத்துதான் இந்த படத்தை ரீமேக் செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பாராம். அவருக்கு அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியது.
ரஜினியை தமிழ் திரையுலகிற்கு நிரந்தர சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘பில்லா’. திரைப்படம் என்றால் அது மிகையாகாது. அப்படத்தை தயாரித்தவர் இவரே. அந்த படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து பெருமளவில் பேசப்பட்டார். ‘ரஜினியைப் போல தயாரிப்பாளர்களை மதிக்கும் ஹீரோக்கள் இப்போது இல்லாமல் போனதாலேயே புதிய படங்கள் எடுப்பதை நிறுத்திக் கொண்டேன்’ என பில்லா படத்தின் ரீமேக் (அஜித் படம்) தொடக்க விழாவில் பாலாஜி கூறினார். இவருடைய இந்த பேச்சு தமிழ் திரையுலகில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது
இப்பேர்பட்டவர் 10 ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘டயாலிசிஸ்’ என்ற ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்நிலையில் தனது 84 வயதில் இதே May 2ல் காலமானார்.
rom The Desk of கட்டிங் கண்ணையா